(தொகுப்பு : ஏரம்பமூர்த்தி கங்காதரன்)
நான் அன்றைய தினம் அதிகாலை 5.30 மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு கடலில் கறிவீசுவதற்காக (கறி சமைப்பதற்காக கடலில் வலை வீசி மீன் பிடித்தல்) புறப்படுவதற்கு தயாரானேன் அப்போது நேரம் காலை 7.30 மணி இருக்கம் நான் வீட்டு முற்றத்தில் நின்றபோது கடல் பக்கம் பெரிய அலை அடித்த சத்தம் கேட்டது கடலைத் திரும்பிப் பார்த்தேன் (இவரின் வீடு அமைந்திருக்கும் இடத்தில் இருந்து 100 மீற்றர் கிழக்காக கடலும் 50 மீற்றர் மேற்றாக வாவியும் உண்டு) பெரிய கடல் அலை ஒன்று எமது வீட்டை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது.
கடல் வருகிறது என அலறிச் சத்தமிட்டேன் எனது மகள் (18 வயது) தனது மோட்டார் சைக்கிள் பக்கத்தில் நின்றார் அலையில் அவர் அடிபட்டு விளுந்தாள் மனைவி வெளியில் நின்று வீட்டுக்குள் ஓடினாள் பின்பு சற்று நேரத்தில் அடுத்த அலை மிகவும் பெரிதாக வந்தது நாங்கள் அனைவரும் (நான் மனைவி மகள்) அலரும் சத்தத்துடன் தண்ணீரில் அடிபட்டு மூள்கினோம்.
அப்போது பக்கத்து வீட்டில் வசித்த எனது அம்மா அப்பா தம்பியின் மனைவி அவரின் 4 பிள்ளைகள் மாமியார் உட்பட அவர்கள் 8 பேரும் சேர்ந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டு உருண்டு போய்க்கொண்டு இருக்கிறோம் (அந்த அனுபவம் மிகவும் சோகமாக மறக்க முடியாதவையாக உள்ளதௌ சொல்லும்போது அவர்களின் கண்ணீரில் இருந்து நீர் கசிந்தது.) அப்போது நான் வாவியின் நடுவில் உள்ளதைக் அவதானித்தேன் எனக்கு நீச்சல் தெரிந்ததால் என்னைத் தக்காத்துக் கொள்ள எத்தனித்தவனாய் நீந்துவதற்கு முற்பட்டபோது பக்கத்தில் ஒரு தோணி நிற்பதனைக் அவதானித்தேன் அப்போது நீந்திச் சென்று அந்தத் தோணியில் ஏறினேன் ஆனால் அதைச் செலுத்துவதற்கு சவள் (துடுப்பு) இல்லையே என எண்ணியபோது நீரில் வந்துகொண்டிருந்த பன மரத்தின் மட்டையை கண்டேன் அந்த மட்டையின் துணையுடன் மெதுவாக தோணியைச் செலுத்தினேன் அருகில் மனைவி தண்ணீரில் தத்தளிப்பதனைக் கண்டு அவரைக் காப்பாற்றி தோணியில் ஏற்றி கரையை நோக்கி வந்தேன்.
எமது வீடு இருந்த இடமே தெரியவில்லை எனது மகள் மற்றும் எனது தம்பியின் குடும்பத்தினர் யாரையுமே காணவில்லை எமது பிரதேசம் மயான பூமியாகக் காட்சியளித்தது.
பார்க்கின்ற பக்கம் எல்லாம் இறந்தவர்களின் உடல்கள்தான் கிடப்பதனைக் கண்டேன் அதன்போது எனது மகளின் இறந்த உடலையும் கண்டேன் அலறினேன் அந்த நேரத்தில் கல்லடி படை முகாமில் இருந்த இராணுவத்தினர் விரைந்து வந்தார்கள் மறுபடியும் கடல் வருவதற்கு சாத்தியங்கள் இருப்பதால் இந்த இடத்தினை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு ஓடிச் செல்லுமாறு துரத்தினார்கள்.
எனது மகளின் உடலையும் அவர்களின் வாகனத்தில் ஏற்றிவிட்டு படுகாயமடைந்த எனது மனைவியும் நானும் அவர்களின் துணையுடன் லக்கி கோட்டலின் கட்டடத்திற்கு வந்து பின்பு எனது மனைவியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்து விட்டு நான் மட் ஆனைப்பந்தி கோவிலிலும் பின்பு மட் மத்திய கல்லூரியிலும் அகதியாகத் தங்கி இருந்தேன் மனைவி 2 வாரங்களாக வைத்தியசாலையிலே சிகிச்சை பெற்றிருந்தார்.
அனர்த்தம் நிகழ்ந்து இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் எனது அம்மா அப்பா தம்பியின் மனைவி அவரின் 4 பிள்ளைகள் மாமியார் உட்பட அவர்கள் 8 பேரும் சுனாமியால் இறந்துவிட்டதாக நான் அறிந்துகொண்டேன் என்றார் நாவலடியில் வசிக்கும் சுனாமியால் தனது சொந்தங்களை இழந்த திரு ஸ்ரீகாந்தன்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்
சுனாமிக்கு முன்னர் இங்கு 490 குடும்பங்கள் வசித்தனர் ஆனானால் தற்போது 90 குடும்பங்களே கடற்றொழிலின் நிமித்தம் வசிக்கின்றனர் இவர்களிலும் அனேகமானோர் வீடுகளைப் ப10ட்டிவிட்டு அச்சத்தின் நிமித்தம் உறவினர்களின் வீடுகளில் வேறு இடங்களில் வசிக்கின்றனர் சிலர் பகலில் தங்கிவிட்டு இரவு நேரங்களில் வேறு இடங்களுக்கு செல்கின்றனர். திராய்மடு கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட குடியிருப்புகளில் எஞ்சிய 400 குடும்பத்திற்கும் மேற்பட்ட நாவலடி மக்கள் குடியேறி உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
அப்போது அவரின் மனைவி ஞானசுந்தரி தெரிவிக்கையில்
சுனாமிக்கு முன் நாங்கள் எல்Nhரும் மிகவும் சந்தோமமாக கலகலப்பாக இருந்தோம் நாவலடிக் கிராமமே எந்நேரமும் பரபரப்பாக இருக்கும் ஆனால் தற்போது அவ்வாறு இல்லை 10 ஆண்டுகள் ஆகியும் எங்களின் மனோ நிலையில் மாற்றம் இல்லை அந்தச் சோகமான அவலத்தினை உயிர் உள்ளவரை என்றுமே எங்களால் மறக்க முடியாமல் உள்ளது எனது கணவர் சொன்னதைப் போன்று நாவலடியில் இருந்து சீலாமுனைக்கு நடந்து செல்வதற்கு மட்டும் ஆவது சிறிது தொட்டில் பாலம் ஒன்று அமைத்துக் கொடுத்தால் இன்னும் மக்கள் இங்கு வந்து குடியேறுவார்கள் எங்கள் பக்கங்களில் மக்கள் குடியேறினால் எங்களின் சோகமான மனோநிலை சிறிதாவது குறையும் என நான் நினைக்கிறேன் என தெரிவித்தார்.
சுனாமி அனர்த்தம் 2004 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்டது இந்த அனர்த்தத்தினால் இலங்கை உட்பட ஆசியாவில் உள்ள பல நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டன எனவே இன்று இந்த துக்க தினத்தின் 10 ஆவது ஆண்டை நாம் அனுஸ்டிக்கின்றோம்.
ஆனால் இந்த அனர்த்தம் ஏற்பட்டு 10 வருடங்கள் கடந்தும் அப்போது ஏற்பட்ட பேரவலத்தினை மறக்க முடியாதவர்களாக இதனால் பாதிக்கப்பட்டவர்களில் அனேகமானோர் இன்னும் வாழ்வதனைக் காண்கின்றோம்.
இந்த சுனாமி அனர்த்தத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நாவலடி கிராமத்தில் மாத்திரம் 1600 பேருக்கு மேல் பலியானார்கள். மேலும் அவர்கள் வசித்த வீடுகள் மற்றம் அந்தக் கிராமத்தில் இருந்த பாடசாலை கோவில்கள் என்பன கடல் அலையால் அடித்துத் செல்லப்பட்டு கிராமமே தரை மட்டமாகின.
இவ்வனர்த்தம் எற்படுவதற்கு முன் இந்தக் கிராமமும் இதனை அண்டிய புது முகத்துவாரம் (பறங்கியர்கள் அதிகம் வசித்த) திருச்செந்தூர் போன்ற கிராமங்களும் எப்பொழுதும் கலகலப்பாக மக்கள் நடமாடுகின்ற பிரதேசங்களாக காணப்படும் ஆனால் இப்போது இந்தப் பிரதேசமானது மயான அமைதி கொண்ட சோகமே நிறைந்த பிரதேசமாகக் காணப்படுவதனைக் காணலாம். இங்குள்ள வீதிகள் யாவும் மக்களின் நடமாடட்மின்றி வெறிச்சோடிக் கிடங்கின்றன ஆலயங்கள் மற்றும் பொதுக் கட்டடங்கள் என்பன மக்கள் இன்றி வெறுமையாகக் காணப்படுகின்றன ஆனால் இங்கு சுனாமியினால் இறந்தவர்களின் நினைவாக நிர்மானிக்கபட்டுள்ள தூபிகள் மாத்திரம் நிமிர்ந்து நிற்பதனைக் காண்கின்றோம்.
Post a Comment