சித்தாண்டி பிரதேசத்தில் வெள்ள நீர் உயர்வடைந்ததன் காரணமாக பெருமாவெளி தொடக்கம் சித்தாண்டி வரை படகுச்சேவை நடைபெற்றது.
சித்தாண்டி பிரிவுகளான 2,3,4, பகுதிகளில் வெள்ள நீர் 4 அடிக்குமேல் உயர்வடைந்திருந்த நிலையில் தற்போது வெள்ள ஒரு சில பகுதிகளைத்த தவிர பெரும்பாளான பகுதிகளில் படிப்படியாக குறைந்துகொண்டு செல்கின்றது.
கடந்த பல நாட்களாக வெள்ள நீர் உயர்வடைந்திருந்தமையினால் பெருமாவெளி, ஈரளக்குளம், பெரியவட்டவான், இலுக்கு, இலாவாணை போன்ற பகுதிகளுக்கான தரைவழிப்போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.
சித்தாண்டி இருந்து சந்தனமாடு ஆற்றுப்பாதை முற்றாக முற்றாக தடைப்பட்டதினால் சித்தாண்டி ஊருக்குள் இருந்து பெருமாவெளி கிராமத்தூடாக படகுச்சேவை இடம்பெற்றது.
சித்தாண்டி ஊருக்குள் வெள்ள நீர் குறைந்தபோதும் சித்தாண்டி ஊர் பகுதியில் இருந்து பெருமாவெளி வரையான படகுச்சேவை இடம்பெற்றவண்ணமுள்ளது. வயல்பகுதிகளில் வசிக்கும் அன்றாட உணவுப்பொருட்களை வாங்குவதற்காக சுமார் 3கிலோமீற்றர் வரை படகு மூலம் பயணம் செய்து பொருட்களை கொள்வனவு செய்துகொண்டு படகிலே பயணத்தை ஆரம்பிக்கின்றார்கள்.
தற்பொழுது சித்தாண்டியில் பல பகுதிகளில் படிப்படியாக வெள்ள நீர் குறைவடைவதினால் வீட்டு உரிமையாளர்கள் இடைத்தங்கள் முகாம்களை விட்டு வெள்ளத்தினால் சேறும் துரியுமாகவுள்ள வீட்டை துப்பரவு செய்வதையும் வெள்ளத்தினால் குடியிருப்புகள், சுற்றுமதில்கள், வேலிகள் மற்றும் வீதிகள் என்பன பெரிதும் அழிவடைந்த நிலையில் காணப்படுவதையும் காணமுடிகின்றது.
Post a Comment