0
காரைதீவு முச்சந்தியான விபுலாநந்த சதுக்கத்தில் சுவாமி விபுலாநந்தருக்கு சிலை அமைக்கும் வேலைத்திட்டம் நேற்றையதினம் (17-12-2014) அன்று இறையருளால் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது. 
இதன்போது காரைதீவு புஷ்பா பொருளாதார கல்வி சமூக அபிவிருத்தி அமைப்பு, காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கம், காரைதீவு அறங்காவலர் ஒன்றியம் ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் காரைதீவு பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது நலன் விரும்பிரும்பிகளுடன் காரைதீவின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் PEESDO தாபகர் செல்லையா இராசையா அவர்களின் வழிகாடலின் கீழ் ஆரம்பிக்கபட்ட காரைதீவு சந்தியில் அமைக்கவுள்ள சுவாமி விபுலானந்தரின் உருவ சிலைக்கான பூமி பூஜை 27.06.2014 மாலை 06.30 மணியளவில் காரைதீவு மகா விஷ்ணு ஆலய குருக்களினால் பூஜை நடைபெற்று வேலைகள் ஆரம்பிக்கபட்டதுடன் மிகக்குறுகிய காலத்துக்குள் துரிதமாக இச் செயற்பாட்டினை செய்து முடித்து வைக்கும் பொருட்டு காரைதீவு புஷ்பா பொருளாதார கல்வி சமூக அபிவிருத்தி அமைப்பு, காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கம், காரைதீவு அறங்காவலர் ஒன்றியம் ஆகிய அமைப்புக்களின் ஒற்றுமையுடன் காரைதீவு பொதுமக்களின் கைகோர்ப்புடனும் நிர்மானபணிகள் மற்றும் நிதி செயற்பாடுகள் முன்னெடுத்து இவ்சிலை அமைக்கும் வேலைத்திட்டம் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.






Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top