(காரைதீவு நிருபர்)
பிரசித்திபெற்ற மட்டக்களப்பு குருக்கள்மடம் ஜயனார் ஆலயத்தின் ஹரிகரசுத மணிகண்ட மண்டலப் பெருவிழா எதிர்வரும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலயகுரு சிவஸ்ரீ வே.கு.நாகராஜா பங்குபற்றுதலில் இடம்பெறவிருக்கிறது.
மாத்தளை சுதுகங்கை ஹரிகரசுத மணிகண்ட சந்நிதான சபரிமலை குருஜீ சிவஸ்ரீ ரவீந்திரக்குருக்களும் திருமலை சாம்பல்தீவு ஈழபுவனீஸ்வரர் சிவஸ்ரீ ரமேஸ்குருக்களும் சிறப்பு குருக்களாகக் கலந்துகொண்டு கிரியைகளை வழிநடாத்துவார்கள்.
விசேட அம்சமாக நாடெங்கிலுமிருந்து மாலை அணிந்த ஜயப்ப பக்தர்கள் அன்றையதினம் ஆலயத்தில் பிரசன்னமாயிருப்பர்.அவர்கள் முன்னிலையில் விசேட பஜனை 11 மணியளவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. ஜயப்ப பக்தர்களுக்கு இது பெருவிருந்தாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அன்று காலை 6மணிக்கு கணபதி ஹோமம் 10மணிக்கு அபிசேகம் 11மணிக்கு பஜனை 12மணிக்கு பூஜை தொடர்ந்து 1மணிக்கு மகேஸ்வரபூஜை (அன்னதானம்) இடம்பெறுமென ஆலய நிருவாகம் அறிவித்துள்ளது.இந்துக்களை இப்பெருநிகழ்வில் கலந்துகொண்டு அன்னதானத்திலும் பங்கேற்குமாறு ஆலய நிருவாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Post a Comment