சந்திவெளி பாலையடித்தோணா கடற்கரையில் உயிருடன் டொல்பின் ஒன்று நேற்று (17) புதன்கிழமை பிற்பகல் கரையொதிங்கியுள்ளது.
உயிருடன் கரையொதிங்கிய டொல்பின் சுமார் 5 அடி நீளமும் 40 கிலோ இடையையும் கொண்டதாக இருக்கலாமென மீனவர்ரொருவர் தெரிவித்தார்.
சில மணிநேரம் கரையில் பார்வையிட்ட பின்னர் மீண்டும் மீனவர்கள் கடலில் விட்டனர். எனினும் இந்த டொல்பின் பலவீனமான நிலையில் காணப்பட்டதால் நீந்தமுடியாது தத்தளித்துக்கொண்டிருந்ததை அவதானிக்கமுடிந்தது. தலையில் வெட்டுக்காயளுடன் கரையொதிங்கியுள்ளது.
கரையொதிங்கிய டொல்பின் பார்ப்பதற்காக பலர் குழுமியிருப்பதையும் அதனை மீனவர்களினால் கடலில் மீண்டும் விடப்படுவதையும் படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

Post a Comment