0
மட்டக்களப்பு சவுக்கடியில்  மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கொங்கிரீட் வீதி இன்று (18) வியாழக்கிழமை மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.

சவுக்கடி பிரதேச கிராம மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் , ஜனாதிபதி ஆலோசகரும் , கிழக்குமாகாண சபை உறுப்பினருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த இவ்வீதியினை மக்கள் பாவனைக்காக நாடா வெட்டி திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் இப் பிரதேசத்திற்கான பிரதிநிதிகளும், பிரதேச மக்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 






Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top