0
(டினேஷ்)

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதான வீதியில் இன்று (02) நண்பகல் 12.30  மணியளவில் வீதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஆலையடிவேம்பு பிரதான வீதியினூடாக சாகாம வீதியினை நோக்கி சென்றுகொண்டிருந்த சிறியரக கேண்டரின் பின்னால் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் வண்டியில் பயணித்தவர் தனது வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமையினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவ இடத்தில் பலத்த காயத்திற்குள்ளான மோட்டர் வண்டி உரிமையாளரை வீதியினால் பயணித்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் கூறியிருந்தனர்.




Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top