(சுலெக்ஸன்)
காரைதீவு விபுலாநந்தா மொன்டிசேரியின் விபுலவிழுதுகளின் விடுகை விழாவானது 30.11.2014 அன்று காரைதீவு விபுலாநந்த மணிமண்டபத்தில் அதன் பணிபாளர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.
முதன்மை அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் கலந்துகொண்ட நிகழ்வில் கெளரவ அதிதியாக வீ.கிருஷ்ணமூர்த்தி , சிறப்பு அதிதிகளாக ஏ.சசிகரன், கலாநிதி .பி.சுரேஸ்குமார், பி.ஸ்ரீகாந், எம்.கேந்திரமூர்த்தி ஆகியோருடன் பெற்றோர்களும் பிள்ளைகளும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இவ்விழாவின் போது சிறார்களின் பல கலை நிகழ்வுகளுடன் புலமை பரிட்சையில் சித்திபெற்ற மாணவர்கள், எதிர்வரும் ஆண்டு தரம் - 01க்கு பாடசாலைக்கு செல்லும், விடுகை பெறும் விபுலமணிகளுக்கு பரிசில் வழங்கி கெளரவிக்கபட்டதுடன், மொன்டிசேரியின் ஆசிரியைகளும் கெளரவிக்கப்பட்டதும் குறிப்பிடதக்கது.
Post a Comment