0
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கெவிலியா மடு பிரதேசத்தில் வாழும் சிங்கள மக்களின் ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பு பிரதான பொலிஸ் நிலையத்தின் முன்பாக இடம்பெற்றது. 

இவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர். இக்கிராமத்தில் 420 குடும்பங்கள் வாழ்வது குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாராதிபதியின் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தமக்கு அடிப்படை உரிமையாகிய வாக்குரிமையை பெற்றுத்தருமாறு கோரியுள்ளனர். 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் பிரசாரத்துக்காக  மட்டக்களப்புக்கு வருகை தரவிருக்கும் நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மேற்படி பகுதியில் தாம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதிலும்,  தமக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்துகொடுக்கப்படவில்லை. தங்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை.  பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் என்பவற்றில் தமது பதிவுகள் எதனையும் பெறமுடியாதுள்ளது. இந்த விடயங்களை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரும் முகமாகவே தாம் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். 




















Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top