0

(சிமஸ்னு)

மண்முனைப்பற்று பிரதேசசபையின் மக்கள் பங்களிப்புடனான 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான பொதுக்கூட்டம் 19.12.2014ம் திகதி பி.ப 3.00 மணியளவில்  மண்முனைப் பிரதேதசபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் வரவுசெலவுத்திட்ட அறிக்கை பிரதேசசபையின் செயலாளர் திருமதி கா.ஜெ.அருள்பிரகாசம் அவர்களினால் ஆலோசனைக்குழு உறுப்பினர்களின் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

வாசிக்ப்பட்ட வரவு செலவுத் திட்ட அறிக்கை எதிர்ப்புகள் எதுவுமின்றி ஆலோசனைக்குழு உறுப்பினர்களால்;  ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில்  வீதிகள் புணரமைப்பதற்கும் பொதுச் சந்தை மற்றும் சனசமூக நிலையங்கள் போன்றவற்றை அபிவிருத்தி செய்வதற்கும் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top