0
திருக்கோவில் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக ஜனாதிபதி வரும் மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரை கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
திருக்கோவில் பிரதேசத்தில் ஆளும்கட்சி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் புஸ்பகுமார் ஏற்பாட்டில் நாளை சனிக்கிழமை (20) தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசார கூட்டத்திற்கு ஜனாதிபதி வருகைத்தரவுள்ளார்.
இந்நிலையில் குறித்த மைதானத்தில் நேற்று இரவு சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரை  பொலிசார் கைது செய்துள்ளனர். திருக்கோவில் பிரதேசத்தைச் 22.23 வயதுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதி  தேர்தலையிட்டு அம்பாறை மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ்ச அக்கரைப்பற்று ,கல்முனை அம்பாறை நகர், திருக்கோவில் ஆகிய பிரதேசங்களில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கு கொள்ளவுள்ளார். இதனையடுத்து இப்பகுதிகளில் இராணுவம் பொலிசார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top