''வளமான இல்லம் செழிப்பான தாயகம்'' எனும் தொனிப்பொருளில் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்சவின் வழிகாட்டலின் கீழ் வளமான இல்லத்தினை உருவாக்கும் நோக்கில் வழங்கப்படவுள்ள பத்தாயிரம் ரூபா ஒதுக்கீட்டின் முதற் கட்டமாக இரண்டாயிரத்து ஐநூறு ரூபாவினை தெரிவு செய்யப்பட்ட திவிநெகும பயனாளிகளுக்கு நாடு பூராகவும் வழங்கப்படுகின்றது.
அதனடிப்படையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புளியந்தீவு மற்றும் கல்லடி பிரதேசங்களுக்கான பயனாளிகளுக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்வுகள் நாவற்குடாவிலும், மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்திலும் அண்மையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் , ஜனாதிபதி ஆலோசகரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய சி.சந்திரகாந்தன் கலந்துகொண்ட நிகழ்வுகளில் விஷேட அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் கலந்து சிறப்பித்ததுடன் , மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக திவிநேகும உயரதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்.
Post a Comment