(பொன்முடி) சித்தாண்டி பிரதேசத்தில் பல தாழ் நில பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
சித்தாண்டி 4ம் குறிச்சியில் 236 வீடுகளும் சித்தாண்டி 3ம் குறிச்சியில் 80 வீடுகளும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவித்தனர்.
சித்தாண்டி சந்தனமடு ஆற்று நீர் மட்டம் உயர்வடைந்ததன் காரணமாக பிரதேசத்தில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.
மற்றும் வந்தாறுமூலை தாழ் நிலப்பிரதேசங்களும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது .
பிரதேசத்தின் தாழ் நில விவசாய பயிர் நிலங்கள் முற்றாக வெள்ள நீரில் மூழ்கியள்ளது.
சித்தாண்டியில் இருந்து ஈரளக்குளம். பெரியவட்டவான் மற்றும் தொப்பிகல செல்லும் தரைவழிப்பாதை முற்றாக தடைப்பட்டுள்ளது.
வெள்ள நீர் அபாயம் காரணமாக மக்களை பொதுக்கட்டங்களில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

Post a Comment