0
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இரவுமுதல் இன்று வரை தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

நேற்று  (19) காலை 8.30 மணி முதல் இன்றுகாலை (20) 8.30 மணிவரையான 24 மணிநேர காலப்பகுதியில் மட்டக்களப்பில் 147.8, மயிலம்பாவெளியில் 98.7, பாசிக்குடாவில் 126.5 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையப் பொறுப்பாளர் கே. சூரியகுமாரன் தெரிவித்தார்.

இதனால் போக்குவரத்து செய்வதில் மக்கள், வாகன சாரதிகளும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

மட்டக்களப்பு, ஆரையம்பதி, காத்தான்குடி, கொக்கட்டிச்சோலை போன்ற பிரதேசங்களிலேயே அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. பிரதேசத்தில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தாழ் நில பிரதேசங்களான கரடியனாறு, வாகரை, செங்கலடி மற்றும் பட்டிப்பளை போன்ற பிரதேச செயலகங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊறணி, குடியிருப்பு, வந்தாறுமுலை, ஏறாவூர், சந்திவெளி, பனிச்சங்கேணி, பால்சேனை போன்ற தாழ் நில கிராமங்கள்  நீரில் மூழ்கும் நிலையும், மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதி பாதிக்கப்படும் நிலையும் காணப்படுகின்றது.


Nigoshan Nigosh's photo.










Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top