மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபர் அருட்சகோதரி மேரி எலிசபெத்திற்கான சேவை நலன் பாராட்டு மற்றும் பிரியாவிடை நிகழ்வு என்பன நேற்றைய தினம் (02) வியாழக்கிழமை கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி அருள்மரியா தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
இதன்போது ஓய்வுபெற்ற அதிபர் மற்றும் அதிதிகள் மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையிலிருந்து மலர் மாலை அணிவித்து கல்லூரி மாணவர்களின் பாண்ட் வாத்திய இசை முழங்க அழைத்துவரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வானது அதிதிகளால் மங்கள விளக்கேற்றப்பட்டு ஆரம்பமாகியதுடன், அதிதிகளும், ஆசிரியர்களும், பழைய மாணவர்களும் ஓய்வுபெற்ற அதிபரை வாழ்த்தி பாடல்களும், கவிதைகளும் பாடி மலர் மாலைகளும் பொன்னாடைகளும் போர்த்திக் கௌரவித்தனர்.
இந்நிகழ்வினை சிறப்பிக்குமுகமாக மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய ஜோசப் பொன்னையா, மாவட்ட செயலாளர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், வலயக் கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் மற்றும் ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகளும் பாடசாலை சமூகமும் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்வின் இறுதியில் ஓய்வுபெற்ற அதிபர் அருட்சகோதரி மேரி எலிசபெத்தின் சமூகப்பணி தொடர்பான விபரங்கள் அடங்கிய நூலொன்றும் வெளியிடப்பட்டமை விசேட அம்சமாகும்.

Post a Comment