ஒவ்வொரு வருடமும் டிசம்பர் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. எந்த நோக்கத்தைக் கொண்டு உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கஆரம்பிக்கப்பட்டதோ அதனை மறந்து அல்லது திட்டமிட்டு திசை திருப்பி வெறுமனே சடங்குக்காக மாத்திரம் தற்போது அனுஷ்டிக்கப்பட்டு வருவதைப் பார்க்கிறோம். எனவே சமுதாய விழிப்புணர்வு கருதி உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு இந்த சிறப்புக் கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.
உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுவதன் பின்னணி
உலக அரங்கில் எயிட்ஸ் நோயை இல்லாது ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று இது ஆரம்பிக்கப்பட்டது.
எயிட்ஸ் (AIDS) என்றால் என்ன ?
Acquired Immune Deficiency Syndrome என்ற சொற்றொடரின் சுருக்கமே AIDS – எயிட்ஸ் என்பதாகும். அதாவது பெறப்பட்ட நோய்த் தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி அல்லது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி என்பது அதன் கருத்தகும்.
மேலும் விரிவாகச் சொல்வதென்றால் எமது உடலில் தொற்றுகின்ற நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி அக் கிருமிகளை அழித்து அல்லது கட்டுப்படுத்தி நோய்களில் இருந்து எமது உடலை பாதுகாப்பதற்காகப் போராடுகின்ற அமைப்பு நிர்ப்பீடணம் அல்லது நோய்த் தடுப்பாற்றல் அல்து நோய் எதிர்ப்பு சக்தி என அழைக்கப்படுகிறது. இந்த சிறப்பு பாதுகாப்புக்குரிய அமைப்புக்கள் – கலங்கள் அழிக்கப்படுவதன் விளைவே எயிட்ஸ் நோய் நிலைமை ஆகும். எனவே இது ஒரு தனி நோய் அல்ல. ஆனால் தடிமன் போன்ற சாதாரண தொற்று நோய் ஒன்றின் மூலமே மரணம் சம்பவிக்கலாம். காரணம் அந்த நோய்க் கிருமியை எதிர்த்து போராடக் கூடிய ஆற்றலை உடல் இழந்துள்ளமையாகும்.
எயிட்ஸ் (AIDS) என்ற நோய் நிலமைக்கு காரணம் என்ன ?
HIV எனப்படும் வைரசு வகையைச் சேர்ந்த நுண்ணங்கியினால் – நோய்க் கிருமியினால் இது எற்படுகின்றது.
நோய் உருவாக்கத்துக்கான பின்னணி
நோயின் பின்னணி குறித்து பல சந்தேகங்கள் முன்வைக்கப்படுகிறது.
- எயிட்சு நோய் பரவல் பிந்தைய 1950 களில், பெல்ஜியத்தின் காங்கோவில், ஹிலாரி கோப்ரொவ்ஸ்கியின் போலியோமையலைடிஸ் தடுப்பூசிக்கான அசட்டையான ஆய்வின் பொழுது ஆரம்பித்து வைக்கப்பட்டதாகும் என பலத்த சர்ச்சைக்குள்ளான தேற்றமான OPV எயிட்சு கருதுகோள் தெரிவிக்கிறது. இதனை மேற்குலகம் ஏற்றுக் கொள்ளவில்லை.
- எச் ஐ வி கிருமி கமரூன் நாட்டில் இருந்த சிம்பன்சியை மனிதன் வேட்டையாடி அதை வெட்டும் போது சிம்பன்சியின் இரத்தம் அதை இறைச்சிக்காக வெட்டிய மனிதனின் கையில் இருந்த காயம் மூலம் பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது.
- (எயிட்ஸ் எப்படி தோன்றியது என்ற கேள்வி பல்வேறு ஊகங்களைத் தாண்டி இன்று மெதுவாகக் கசிந்து வரும் உண்மை ஒன்று ஏகாதிபத்திய உலகமயமாதலின் சூறையாடலை அம்பலப்படுத்துகின்றது) ஆப்பிரிக்காவில் போலியோ போன்ற நோய்களைத் தடுக்க புதிய கண்டுபிடிப்பாகக் கண்டறிந்த தடுப்பூசியொன்றை திட்டமிட்டு மூன்றாம் உலக மக்கள் என்று கூறப்படும் வறிய நிலையிலுள்ள ஆப்பிரிக்காவின் கோடிக்கணக்கான மக்கள் மீது நோய் எதிர்ப்பு மருந்து என்று கூறி, எந்தவிதமான முன் பரிசோதனையுமின்றி ஏற்றிய தடுப்பூசிதான், எய்ட்சின் மூலமாகியது என்று தெரிய வருகின்றது. உலக பொருளாதாரத்தை சூறையாடும் அமைப்புக்களின் புதிய கண்டுபிடிப்புகள் கோடீஸ்வரர்களை உருவாக்கக் கூடிய மூலதனமாக இருப்பதால், புதிய கண்டுபிடிப்புகள் மக்கள் மீது நேரடியாகப் பரிசோதனை செய்யப்படுகின்றது. இதற்காகப் பயன்படும் மூன்றாம் உலக மக்கள் விஞ்ஞானிகளின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தின் அடிமைகள் என்றுதான் கருதப்படுகிறார்கள்.
- திட்மிட்ட சதியே காரணம்
அமெரிக்க விஞ்ஞானிகள் முஸ்லிம்களை அழிக்க எயிட்ஸ் என்னும் உயிர்கொல்லி வைரசைக் கண்டு பிடித்தனர் என்று பலராலும் நம்பப்படுகிறது.
எயிட்ஸ் என்னும் வைரஸ் மனித குலத்தை முன்னர் எபோதும் தாக்கியதே இல்லை. காரணம் மனித குலம் விஞ்ஞான ரீதியாக வளர்ச்சியடையாத காலத்தில் இந் நோய் தாக்கியிருந்தால் மனித குலமே அழிந்துபோயிருக்கும்.
குறிப்பாக நெல் அல்லது கத்தரிக்காய் போன்ற பயிர் வகைகளை அல்லது தானியங்களை ஆராய்ந்து இரண்டு வகை பயிர்களை இணைத்து புதிய வீரியம் மிக்க பயிர்களை விஞ்ஞானிகள் உருவாக்குவது குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அவ்வாறு இரண்டு வைரஸை எடுத்து அதனூடாக ஒரு வைரஸை உருவாக்கி பின்னர் அதற்கும் இன்னொரு வைரஸூக்கும் மேலும் ஒரு வைரஸைப் பிறக்க வைத்து இப்படியாக பன்மடங்கு வீரியம் மிக்க வைரஸை அமெரிக்க தயாரித்தது என நம்பப்படுகிறது.
எனவே இவை இலகுவாக ஆணுக்குத் தொற்றிக்கொள்ளும். அதேபோல எயிட்ஸ் நோய் தாக்கிய ஆண் உடலுறவு கொள்ளும்போது ஆண் உறுப்பில் இருந்து வெளிப்படும் விந்து மற்றும் ஏனைய திரவங்களிலும் இந்த வைரஸ் காணப்படும். இவை இலகுவாகப் பெண்களுக்கும் தொற்றிக்கொள்ளும்.
அமெரிக்க இவ்வகையான வைரஸை உருவாக்கி அதனை குரங்கில் பரீட்சித்துப் பார்தவேளை அக் குரங்குகளில் ஒன்று சற்றும் எதிர்பார்க்காத வகையில் அங்கிருந்து தப்ப முயன்று இறுதியில் காவலாளிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளதாகவும் ஒரு ஆய்வு சொல்கிறது.
எயிட்ஸின் கண்டுபிடிப்பு
ஜூன் 5, 1981அன்று அமெரிக்காவைச் சேர்ந்த நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி),ஆண் ஓரினச்சேர்க்கை கொண்டிருந்த 5 நபர்களிடம் ஒரு அரிய வகை நிமோனியாவைக் கண்டறிந்து ஓர் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையே எயிட்ஸ் கண்டறியப்பட்டதற்கான முதல் ஆவணமாகும். முதலில் எயிட்ஸ் என்பது ஓரினச்சேர்க்கையோடு தொடர்புடைய நோய் எதிர்ப்பு குறைப்பாடு என்று அழைக்கப்பட்டது. ஓரினச்சேர்க்கை புற்று நோய் என்றும் இது ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. இவ்வாறாக எயிட்ஸ் நோய் 1981ம் ஆண்டிலேயே அறியப்பட்ட போதிலும், அதை உண்டாக்கும் வைரஸ் கிருமி 1983ம் ஆண்டிலேயே இனங்காணப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் உள்ள பாஸ்டர் விஞ்ஞானக் கூடத்தில் (Institute Pasteur) பிரான்சு நாட்டு விஞ்ஞானி லூக் மொண்டிக்கயர் எனும் விஞ்ஞானியால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பொழுது இது L.A.V வைரஸ் (Lymphadenopathy associated Virus) என்று பெயரிடப்பட்டது. 1984 ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ”’தேசிய புற்று நோய் நிறுவனம்”’ இக்கிருமிதான் எயிட்ஸ் நோயை உண்டாக்குகிறது என்பதை உறுதிப்படுத்தியது. அப்பொழுது இதற்கு H.I.V – type III வைரஸ் ( Human T-Iymphotrophic Virus type III) என்று பெயரிடப்பட்டது. 1986 ம் ஆண்டில் தான் தற்போது பயன்படுத்தப்படும் HIV வைரஸ் (Human (மானுட) I mmuno deficiency (நீர்ப் பீடனக் குறைபாடு.) Virus (வைரசு)) என்ற பெயர் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
HIV வைரஸின் இரண்டு உப பிரிவுகள் இருப்பதாக இப்பொழுது நம்பப்படுகிறது. ஆரம்பத்தில் அமெரிக்கா உட்பட மேற்கத்தைய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டதை HIV-I என்றும், பின்பு மேற்கு ஆபிரிக்க நாடுகளில் கண்டு பிடிக்கப்பட்ட புதிய உபபிரிவை HIV – II என அழைக்கிறார்கள்.
எயிட்ஸ் பரவுதல் தன்மை
பொதுவாக HIV மனித உடலில் உள்ள எல்லா திரவங்களிலும் படிந்திருக்கிறது என்றாலும் கூட, இரத்தம், விந்து, பெண்ணுறுப்புகளில் உருவாகும் திரவம், தாய்ப்பால் ஆகியவற்றின் வாயிலாகத்தான் பரவுகின்றது. எனவே ஆண் பெண் உடலுறவின் போது பாதுகாப்பு முறைகளைக் கையாள்வது அவசியமாகின்றது. எச்.ஐ.வி தொற்று உள்ளவருடன் உடல் உறவு கொள்வோருக்கு இந்த எச்.ஐ.வி தொற்றி விடுகிறது. 80 சதவீத எயிட்ஸுக்கு காரணம் பாதுகாப்பற்ற உடல் உறவுதான் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு எயிட்ஸ் அதிகமாக பரவுகிறது. அதற்கு காரணம் அந்த வயதில் அவர்கள் பாலுறவில் அதிக நாட்டமிக்கவர்களாக இருப்பதால் பாதுகாப்பானவர்களுடன் மாத்திரம் உடல் உறவு என்பதை மறந்து விடுகிறார்கள்.
மேலும் போதைப் பொருட்களைப் பயன்படுத்துகையில் சுத்தம் செய்யாப்படாத ஊசியை ஒருவருக்கொருவர் செலுத்திக் கொள்வதன் மூலமாகவும் HIV பரவுகிறது. இதே போல் அறுவை சிகிச்சையின் போது சுத்திகரிக்கப்படாத ஆயுதங்களைப் பயன்படுத்துவதனாலும், HIV பரவக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதே நேரம் HIV உள்ள இரத்தம் மூலமாகவும் எளிதாக பரவுகிறது.
பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுதல் எனும் போது கர்ப்பகாலம், பேறு காலம், தாய்ப்பால் புகட்டும் காலம் ஆகிய காலங்களில் குழந்தைக்கு HIV பரவுகிறது.
எயிட்ஸ் நோயுற்றவரின் உடற் திரவங்களுடன் தொடர்பு ஏற்பட்ட எவரையுமே இந்நோய் தாக்கக்கூடும். அதே நேரம் கொனரியா (Gonorrohoea), சிபிலிஸ் (Syphilis), ஹெர்பீஸ் (Herpes) போன்ற ஏனைய பாலியல் நோய் உள்ளவர்களுக்கும், பாலியல் உறுப்புகளில் சிறுகாயங்கள், உரசல்கள் உள்ளவர்களுக்கும். பலரோடு உடலுறவு வைப்பவர்களுக்கும் இந்நோய் ஏற்படக்கூடிய நிகழ்தகவு அதிகம்.
HIV தொற்றியோருடன் சாதாரணமாக சமூக பழக்கவழக்கங்களில் ஈடுபடுவதனூடாகவோ, கைகுலுக்குதல், தொடுதல், விளையாடுதல், புகையிரதம் மற்றும் பஸ் வண்டிகளில் பயணம் செய்தல் மூலமாகவோ, பொதுக்கழிப்பறைகள் மற்றும் படுக்கை, அவர்கள் பயன்படுத்திய உணவுப் பாத்திரங்கள் மூலமாகவோ, நீச்சல் குளம் மற்றும் இருமல், தும்மல் மூலமாகவோ பரவாது. உமிழ் நீர் மூலமாக எயிட்ஸ் பரவும் வாய்ப்பு உண்டு என்று சில ஆய்வுகள் சொல்கின்றது.
தாயிடமிருந்து குழந்தைக்கு நோய் பரவுதல்
தாயின் கருவறையில் இருக்கும்போதே குழந்தைக்கு எயிட்ஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
ஏற்றுக் கொள்ளத்தக்க, எளிதாகப் பெற்றுக் கொள்ளவல்ல, நிலையான மற்றும் பாதுகாப்பான, மாற்று உணவு இருப்பின் எச் ஐ வி யால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தங்கள் சிசுவிற்குத் தாய்ப் பாலூட்டுவதைத் தவிர்க்க வேண்டுமென தற்போதைய பரிந்துரைகள் அறிவிக்கின்றன. எனினும் அவ்வாறு இயலாத பட்சத்தில் குழந்தையின் ஆரம்ப கால மாதங்களில் பிரத்தியேக தாய்ப்பால் கொடுப்பதும் பின்னர் முடிந்தவரை விரைவாக அதனை நிறுத்தி விடுதலும் சிறந்தது.
எயிட்ஸ் அறிகுறிகள்
அறிகுறிகள் HIV பாதிப்புக்குள்ளான பலரிடம் ஆரம்பநிலையில் அதற்கான அறிகுறிகள் தெரிவதில்லை. இருந்தபோதிலும் சிலரிடம் இது காய்ச்சலாக வெளிப்படுகிறது. அதுவும் இந்த வைரஸ் மூன்று முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகே தெரிகிறது. இந்தத் தீவிர HIV பாதிப்பினால் ஏற்படும் உடல் நலக்குறைவு, காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு, குமட்டல், வியர்வை (குறிப்பாக இரவு நேரங்களில் ) நடுக்கம், வயிற்றுப்போக்கு, நெறிகட்டுதல் (அக்குள், கழுத்து) போன்றவற்றினைத் தோற்றுவிக்கின்றது. இந்த அறிகுறிகள் கூட HIV தொற்றிய ஒரு சில நாட்களில் தெரிவதில்லை. மேலும் இது, ஆரம்பநிலையில் வேறு ஏதோ ஒரு வைரஸ் என்று தவறாகவே இனங் காணப்படுகிறது. எனவே ஆரம்ப நிலையில் HIV தொற்றைக் கண்டுபிடிப்பது கடினமாகும்.
தொற்று ஏற்பட்ட முதல் மூன்று மாதங்களில் வைரசின் எண்ணிக்கை கணக்கற்றுப் பெருகி, உடலின் பல பாகங்களிலும் பரவுகின்றன. குறிப்பாக மூட்டுக்களில் உள்ள இழையங்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் அத்தொற்று, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகப் பரவிவிடுகின்றது.
உடலில் உள்ள நோய் எதிர்ப்பு கலங்களான வெண் குருதித்துணிக்கை அனைத்தும் ஒன்று திரண்டு போராடத் தொடங்கும் போதுதான் HIV யின் வேகம் சற்று குறைகிறது. HIV தொற்றின் தீவிரமான அறிகுறிகள் தெரிய பல வருடங்கள் ஆகின்றன.
ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலமுடைய மனிதர்களில் உருவாகாத சில நிலைகளின் விளைவே எயிட்ஸ் நோயின் அறிகுறிகள் ஆகும். பெரும்பாலும் இவ்வசாதாரண நோய் நிலைகள் பாக்டீரியா, வைரசு, காளான் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற நோய்கிருமிகளின் தாக்கத்தால் ஏற்படுகின்றன. இந்நோய்க் கிருமிகளை கட்டுக்குள் வைத்திருக்கும் நோயெதிர்ப்பு மண்டலம் எச்.ஐ.வியால் சீரழிக்கப்படுவதே நோய்க்கிருமிகளின் தாக்கத்திற்குக் காரணமாகும்.
வாய்ப்பை எதிர்நோக்கிய நோய்த் தொற்றுக்கள் எயிட்ஸ் கண்ட மனிதர்களில் மிகுதியாகக் காணப்படுகிறது.
எச்.ஐ.வி. கிட்டத்தட்ட அனைத்து உறுப்பு மண்டலங்களையும் பாதிக்கிறது.
எயிட்சு நோய் கண்டவர்களுக்கு காபோசியின் சதைப்புற்று, கருப்பை முகப்பு புற்றுநோய், நிணத்திசுப் புற்று என்றழைக்கப்படும் நோய் எதிர்ப்பு மண்டல புற்றுநோய் போன்ற புற்று நோய்கள் எளிதாக தாக்கும் தன்மை உள்ளது. கூடுதலாக எயிட்சு நோய் கண்டவர்களில் உடலளாவிய நோய் அறிகுறிகளான காய்ச்சல், வியர்வை (குறிப்பாக இரவு நேரங்களில்) வீங்கிய சுரபிகள், நடுக்கம், தளர்ச்சி மற்றும் எடை குறைவு போன்றவை காணப்படும். அவரவர் வாழும் நிலப்பகுதியில் நிலவும் நோய் விகிதத்திற்கேற்ப எயிட்ஸ் நோயாளிகள் பிரத்தியேக நோய்த் தொற்றுகளுக்கு ஆளாகின்றனர்.
சுவாச நோய் தாக்கம்
நோய் நிலமை
நியுமோசிஸ்டிஸ் நிமோனியா இது ஆரோக்கியமான நோயெதிர்ப்புத்திறன் பெற்றவர்களில் மிக அரிதாகவும், எச்.ஐ.வி. நோயாளிகளில் மிக சாதரணமாகவும் காணப்படுகின்றது. இந்நோய் நியுமோசிஸ்டிஸ் ஜிரோவேசியை எனும் கிருமியினால் ஏற்படுகின்றது.
மேற்கத்திய நாடுகளில் சரியான நோய்கண்டறிதல், சிகிச்சைமுறை மற்றும் நோய்க்கட்டுப்பாடு கண்டறியப்படும் முன்னர் இந்நோயே உடனடி மரணத்திற்கு காரணமாய் இருந்தது. “சி.டி.4″ எண்ணிக்கை ஒரு மைக்ரோ லிட்டர் ரத்ததில் இருநூறு கலங்களுக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே நோய்த் தாக்கும் அபாயம் உள்ள போதிலும், வளர்ந்து வரும் நாடுகளில் எயிட்ஸ் நோய் பரிசோதிக்கப்படாத நபர்களில் இந்நோய் எயிட்ஸின் முதல அறிகுறியாக உள்ளது.
காசநோய்
எச்.ஐ.வியோடு தொடர்புடைய நோய் தாக்கங்களில் தனித்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இது நோய் எதிர்ப்புத்திறன் உள்ள மனிதர்களுக்கும் சுவாசம் வழியாகப் பரவக்கூடியது. இந்நோய் கண்டறியப்படும் பட்சத்தில் எளிதாகக் குணப்படுத்தமுடியும். இந்நோய் எச் ஐ வி – யின் ஆரம்ப நிலையில் ஏற்படலாம். சிகிச்சையின் மூலம் குணப்படுத்த வல்லது. இருப்பினும், பன் மருந்து எதிர்ப்பு ஒரு அதீத பிரச்சனையாகவே உள்ளது.
காசநோய் தாக்கம் மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்படும் நேரடி சிகிச்சை முறை மற்றும் ஏனைய மேம்படுத்தப்பட்ட நடைமுறைகளினாலும் குறைந்து வருகின்றது. ஆனால் எச்.ஐ.வி. பரவியுள்ள வளர்ந்துவரும் நாடுகளில் இத்தகைய மாற்றம் இல்லை. எச்.ஐ.வி-யின் ஆரம்ப நிலையில் (“சி.டி.4″ எண்ணிக்கை > 300 செல்கள்/மைக்ரோ லிட்டர்), காசநோய் ஒரு வரையறுக்கப்பட்ட சுவாசநோயாக வெளிப்படுகிறது. எச்.ஐ.வி. நோய்த்தாக்கம் அதிகரிக்கும் பொழுது, காசநோய் சுவாசநோய்த் தன்மையில் இருந்து மாறுபட்டு நுரையீரலுக்கு வெளியே (உட்பரவிய) நோயாக வெளிப்படுகிறது. நோயறிகுறிகள் ஒரே பகுதியில் அல்லாமல், வெகுவாக எலும்பு மஜ்ஜை, எலும்பு, சிறுநீரக மற்றும் இரைப்பைக் குடல் வழி, கல்லீரல், மண்டல நாள முடிச்சு மற்றும் மைய நரம்பு மண்டலம் போன்றவைகளை பாதிக்கின்றது.
இரைப்பைக் குடல் கிருமித் தாக்கங்கள்
உணவுக்குழல் அழற்சி என்பது உணவு குழலின் (தொண்டையையும் இரைப்பையையும் இணைக்கும் குழல்) கீழ் முனையில் உள்ள படர்சவ்வில் ஏற்படும் அழற்சியாகும். எச் ஐ வி நோய் பாதிக்கப்பட்ட நபர்களில் இது காளான் (கேண்டிடியாசிஸ் )அல்லது வைரசினால் ஏற்படும்.
சில நிகழ்வுகளில், எச் ஐ வி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் பக்கவிளைவாகவோ அல்லது எச் ஐ வி நோயின் தொடர்விளைவாகவோ வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இது பெரும்பாலும் ஆரம்ப கால நோயின் குணாதிசயமாக இருக்கிறது. எச் ஐ வி நோயின் பிந்தைய காலங்களில் ஏற்படும் வயிற்றுப் போக்கானது உணவு பாதையின் சத்துக்களை கிரகிக்கும் திறனில் ஏற்படும் மாற்றத்தால் விளைந்து எச் ஐ வி யின் உடலை இளைக்க வைக்கும் தன்மைக்கு துணை போவதாய் இருக்கிறது.
நரம்பு மண்டல மற்றும் மனநல தொடர்பு
இந்நோயின் போது நாளடைவில் பலவீனமாகி விட்ட நரம்பு மண்டலத்தை நுண்ணியிரிகள் தாக்குவதன் மூலமாகவோ அல்லது நேரடி நோய்ப்பிணியின் காரணமாகவோ விதவிதமான மூளை நரம்பு விளைவுகள் ஏற்படலாம்.
ஒருவகை ஓரணு ஒட்டுண்ணி நோய் (டாக்சாப்பிளாசுமம்) ஒரு கல ஒட்டுயிரியான டாக்சோபிளாசுமா காண்ட்டையால் ஏற்படுகிறது. இது பொதுவாக மூளையைத் தொற்றி டாக்சோபிளாசுமா மூளையழற்சியையும், கண்கள் மற்றும் நுரையீரலின் வியாதிகளையும் ஏற்படுத்தவல்லது. கிரிப்டோகொக்கல் மெனிஞ்சைடிஸ் எனப்படும் மூளைச்சவ்வு அழற்சி கிரிப்டோகாக்கஸ் நியோபார்மன்சு எனும் காளான் மூளை மற்றும் தண்டுவடத்தை சூழ்ந்துள்ள மூளை உறையைத் தொற்றும்போது ஏற்படுகிறது. இது காய்ச்சல், தலைவலி, மயக்கம், வாந்தி எடுக்கவேண்டும் என்ற உணர்வு மற்றும் வாந்தியை ஏற்படுத்தலாம். நோயாளிகளுக்கு வலிப்பு மற்றும் மன குழப்பத்தையும் ஏற்படுத்தலாம். சிகிச்சை அளிக்கத் தவறினால் மரணமும் ஏற்படலாம்.
தீவிர பல்குவிய வெள்ளையணு மூளையழற்சி (PML)
மூளையின் நரம்பணுவால்களை சூழ்ந்துள்ள மையலின் நரம்புறையை படிப்படியாக அழித்து நரம்புகளில் அனிச்சை விளைவுக் கடத்தலைப் பாதிக்கும் நரம்புறை சிதைவு நோயாகும். இந்த நோயானது 70 சதவிகித மக்களிடையே உட்புதை நிலையையிலுள்ள நச்சுயிரியான ஜே சி வைரசால் நோயெதிர்ப்பு சக்தியற்ற எயிட்ஸ் நோயாளிகளுக்கு ஏற்படுத்தப்படுகிறது.
இந்நோய் விரைவாக முன்னேறி பெரும்பாலும் கண்டுபிடித்த சில மாதங்களுக்குள்ளேயே மரணத்தை ஏற்படுத்தவல்லது.
பெரியவர்களுக்கு HIV தொற்றிய பிறகு அது வெளித் தெரிவதற்கு 10 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. HIV தொற்றோடு பிறக்கும் குழந்தைகளுக்கு அது தெரிய இரண்டு வருடங்கள் ஆகின்றன. இவ்வாறு அறிகுறிகள் தெரியாத நிலை மனிதருக்கு மனிதர் மாறுபடும். “எயிட்ஸ்” வெளியில் தெரிய ஆரம்பித்த உடன் பாதிக்கப்பட்டவர் அடிக்கடி நோய் வாய்ப்படுவர். உடல் எடை குறைவு, தொடர் காய்ச்சல், வயிற்றுப் போக்கு ஆகியன எயிட்ஸின் முக்கியமான அறிகுறிகளாகும். மேலும் எயிட்ஸ் நோயாளிகள், காசநோய், பங்கசு நோய் தொற்று, சில வகைப்புற்று நோய்கள், நிமோனியா போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
நோய்த் தெற்றுகையின் பின்னரான நிலைமை
நீல நிறக் கோடுகள் – உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலையும்
சிவப்பு நிறக்கோடுகள் HIV வைரஸின் பெருக்கத்தையும் குறிக்கிறது.
பாதிப்புக்கள் புள்ளிவிபரம்
- உலகில் ஒவ்வொரு மணி நேரத்திலும் 600 நபர்கள் எச்.ஐ.வியால் புதிதாக பாதிக்கப்படுகிறார்கள்.
- உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு குழந்தை எய்ட்ஸ் மூலம் இறக்கிறது.
- அதிகளவில் எயிட்ஸ் நோயோடு வாழ்வோர
1 South Africa – 5,600,000
2 Nigeria – 3,300,000
3 India – 2,400,000
4 Kenya – 1,500,000
5 Mozambique – 1,400,000
6 Tanzania – 1,400,000
2 Nigeria – 3,300,000
3 India – 2,400,000
4 Kenya – 1,500,000
5 Mozambique – 1,400,000
6 Tanzania – 1,400,000
அதிகளவில் எயிட்ஸ் நோயினால் மரனித்தோர்
1 South Africa – 310,000
2 Nigeria – 220,000
3 India – 170,000
4 Tanzania – 86,000
5 Zimbabwe – 83,000
6 Kenya – 80,000
2 Nigeria – 220,000
3 India – 170,000
4 Tanzania – 86,000
5 Zimbabwe – 83,000
6 Kenya – 80,000
உலக சுகாதார அமைப்பின் 2006 கணக்கெடுப்பின்படி
உலகளாவிய ரீதியில் எய்ட்ஸ் தொடர்புடைய நோயின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியனாக அதிகரித்திருந்தது. 39.5 மில்லியன் மக்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில், 4.3 மில்லியன் மக்கள் புதிதாக நோய் காவப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆபிரிக்காவின் சகாராப் பாலைவனப்பகுதியை அண்மித்த பகுதி எய்ட்ஸ் நோயினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியாகும்.
2007-ல் அப்பகுதியில் எயிட்ஸுடன் வாழ்பவர்களில் 68 % ஐயும், எயிட்ஸினால் மரணமடைந்தவர்களில் 76% ஐயும் உள்ளடக்கியிருந்ததோடல்லாமல், பின்பு வந்த 1.7 மில்லியன் புதிய நோய்த்தொற்றுக்கள், எச் ஐ வி யுடன் வாழ்வோர் எண்ணிக்கையை 22.5 மில்லியன் என்ற அளவிற்கு உயர்த்தியுள்ளதையும், அப்பகுதியில் எயிட்ஸினால் அனாதையாக்கப்பட்ட 11.4 மில்லியன் குழந்தைகள் வாழ்ந்து வருவதையும் உள்ளடக்கியிருந்தது. ஏனைய பகுதிகளைப் போலல்லாமல் சகாராவை அண்மித்த பகுதிகளில் எச் ஐ வி யுடன் வாழ்வோரில் 61% பேர் பெண்களாவர். தென்னாப்பிரிக்காவே உலகிலேயே அதிக அளவில் எச் ஐ வி நோயாளிகளைக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து நைஜீரியாவும் இந்தியாவும் உள்ளன
இந்தியாவில்
இந்தியாவில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரில் பத்தில் ஒருவர் குடும்பத் தலைவியாக இருக்கின்றனர்.அரசு நிதி உதவியுடன் இயங்கும் தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (நேகோ) 29 இலட்சம் பேரைப் பரிசோதித்தது. இதில் 49,527 பேருக்கு எயிட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 3,161 பேர் ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது.
ஐ.நா. எயிட்ஸ் திட்டம் இந்தியாவில் 30 இலட்சம் பேருக்கு எயிட்ஸ் இருப்பதை உறுதி செய்தது. இந்தியாவில் 22.3 கோடிக்கு அதிகமான ஆண்கள் தீவிரமான பாலியல் நடத்தையில் ஈடுபடுபவர்களாக இருக்க, அதில் 10 சதவீதம் பேர் விபச்சாரிகளை நாடுகின்றனர். அதாவது 2.23 கோடி ஆண்கள் விபச்சாரத்தை நாடி செல்லுகின்றனர். இந்த ஐ.நா. அறிக்கையின் படி கி.பி. 2000-ஆம் ஆண்டில் 50 இலட்சம் எயிட்ஸ் நோயாளிகள் இந்தியாவில் இருப்பர் என்று எச்சரித்ததுடன், 80 இலட்சம் ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ் (H.I.V. Positive) உடையவர்களாக இருப்பர் என்ற தகவலையும் வெளிப்படுத்தியிருந்தது.
இந்தியாவில் எயிட்ஸ் எதிர் பாலருடன் ஏற்பட்ட உறவால் (ஆண் – பெண்) மூன்றில் இரண்டு பேருக்குத் தொற்றியது. மேற்கு நாட்டில் 70 சதவீத எயிட்ஸ் ஓரினச் சேர்க்கையால் ஏற்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த தேகா என்ற அமைப்பு கடந்த 11 வருடமாக 16,154 பேரிடம் நடத்திய ஆய்வின் போது 48 சதவீதம் பேர் திருமணத்துக்கு முன் உடல் உறவு கொண்டதை ஒப்புக் கொண்டனர். திருமணம் செய்தவர்களில் 20 சதவீதம் பேர் ஆண் – பெண் தம் உறவுக்கு வெளியில் உறவு கொள்பவர்கள் என ஒத்துக் கொண்டனர். இந்தியாவில் பம்பாயில் (மும்பை) கி.பி. 1996-இல், கர்ப்பிணிப் பெண்களிடம் எடுத்த இரத்தப் பரிசோதனையில் 2.7 சதவீதம் பேருடையதில் எயிட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை ஏஷியா-பசிஃபிக் நெட்வொர்க் ஆஃப் பீப்பிள் (ஏ.பி.என்.) நடத்திய ஆய்வில் எய்ட்சுக்குப் பதிவான 79 ஆண் 46 பெண்களில் 64.8 சதவீதம் பேர் பட்டதாரிகள். 24.8 சதவீதம் பேர் முதுநிலை பட்டதாரிகள். 7.2 பேர் பி.எச்.டி. (முனைவர்) பட்டதாரிகள் ஆவர்.
புனே ஆஸ்பத்திரியில் எயிட்ஸ்க்கு மருத்துவம் தேடி வரும் பெண்களில் 14 சதவீதம் பேர் குடும்பப் பெண்கள்ஆவர். இது வருடம் 3 சதவீதம் அதிகரிக்கின்றது. எயிட்ஸ் அவேர்னஸ் அண்ட் ப்ரிவென்ஷன் என்ற அமைப்பின் அறிக்கையில் நடுத்தர வர்க்க நோயாளிகளின் எண்ணிக்கை வருடம் 30 சதவீதம் அதிகரிக்கின்றது என்றும் பெருமளவில் எயிட்ஸ் தொற்று விபச்சாரம் மூலம் தொற்றுகின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் எப்படி எயிட்ஸ் பரவுகின்றது என்பதையும், அவர்களிடையே நோய்த்தடுப்பு எப்படி பலவீனமாக உள்ளது என்பதையும் இப்புள்ளிவிபரம் அம்பலப்படுத்துகின்றது. பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இதன் மூலம் கோடி கோடியாக மூலதனத்தைத் திரட்டவும், அப்பாவி மக்களை கொன்று ஒழிக்கவும் உலகமயமாதல் தனது மூலதனத் திரட்சிக் கொள்கையை வெற்றிகரமாகக் கையாளுகின்றது. அந்த மக்கள் பட்டினி முதல் எயிட்ஸ் வரை பொதுவான இறப்பு விதியாகி அழிகின்றனர்.
பிரான்சில்
கி.பி. 2000-ஆம் ஆண்டில் பிரான்சில் 1,20,000 முதல் 1,50,000 வரையிலான பேர் எயிட்ஸ் நோய்க் காவியாக (Zero Positive)இருக்க, 50,000 பேர் எயிட்ஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதில் 35.2 சதவீதம் பேருக்கு எயிட்ஸ் உண்டாகக் காரணம் ஓரினச் சேர்க்கையும், போதைவஸ்து பயன்பாடும் காரணமாகும். இந்தச் சதவீதம் அதிகரித்துச் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில்
அமெரிக்காவில் எயிட்ஸ்க்கு உள்ளானோர் 5 இலட்சமாக அதிகரித்துள்ளது. கி.பி. 1981 முதல் கி.பி. 1987 வரையிலான காலத்தில் எயிட்ஸ்க்கு உள்ளான பெண்கள் 8 சதவீதமாக இருந்தது. இது கி.பி. 1993 முதல் கி.பி. 1995-இல், 18 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உலகில்
எயிட்ஸ் நோய் உலகில் இதுவரை 33.6 கோடி மக்களைக் கொன்று ஒழித்துள்ளது. கி.பி. 1997-இல், 23 இலட்சம் பேரைக் கொன்றது.” ஒவ்வொரு நாளும் 8,500 பேருக்கு எயிட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்படுகின்றது. இவர்களில் 1,400 பேர் முதல் ஒரு வயதுக்குள்ளாகவே இறந்துவிடுகின்றனர். இந்த நோய் உலக வளர்ச்சியை 1.3 ஆண்டுகள் பின்நோக்கி தள்ளிவிட்டதாக ஐ.நா. சபை அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.
பிரதேசம் | எயிட்ஸ் உள்ளோர் | எய்ட்சால் மரணமடைந்தோர் |
---|---|---|
தென் ஆப்பிரிக்கா | 2,33,00,000 | 1,37,00,000 |
வடஆப்பிரிக்கா, அரபு நாடுகள் | 2,00,000 | 70,000 |
தென் அமெரிக்கா | 13,00,000 | 5,20,000 |
கரிபியன் நாடுகள் | 3,60,000 | 1,60,000 |
தென் கிழக்கு ஆசியா | 60,00,000 | 11,00,000 |
ஐரோப்பா | 5,20,000 | 2,10,000 |
மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா | 3,60,000 | 17,000 |
பசுபிக் நாடுகள், கிழக்கு ஆசியா | 5,30,000 | 40,000 |
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து | 42,000 | 8,000 |
ஆப்பிரிக்காவை எயிட்ஸ் பாதிப்பு மிகவும் அதிகமாக பாதிக்கின்றது. இதை பின்வரும் அட்டவணையில் இருந்து ஆராய்வோம்.
- 15-49 வயது உடையவர்களில் எயிட்ஸ். சதவிகிதத்தில்
- 2005 இல் எயிட்ஸ் உள்ளவர்களின்; சராசரி வயது
- 2005 இல் எயிட்ஸ் இல்லாதவர்களின் வாழும் சராசரி வயது
1 | 2 | 3 | |
---|---|---|---|
சாம்பி | 19 | 42 | 60 |
பொற்ஸ்வானா | 25 | 41 | 70 |
நமீபியா | 20 | 41 | 62 |
தென் ஆப்பிரிக்கா | 13 | 47 | 64 |
மொசாம்பிக் | 14 | 38 | 53 |
சிம்பாப்வே | 26 | 41 | 66 |
மாலாவி | 15 | 40 | 53 |
கென்யா | 12 | 48 | 66 |
உகான்டா | 15 | - | - |
ருவாண்டா | 13 | 41 | 51 |
பொருளாதார பாதிப்பு
எச் ஐ வி மற்றும் எயிட்சு மனித மூலதன இருப்பைக் குறைத்து பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கிறது. மனித மூலதனம், பொருளாதார வளர்ச்சி வளர்ந்த நாடுகளைப் போலல்லாது, சரியான போஷாக்கு மற்றும் உடல் பராமரிப்பு மற்றும் மருந்துகளின்றி எயிட்சு தொடர்பான சிக்கல்களினால் பலர் அவதிப்பட்டு மரிக்கின்றனர். வேலைசெய்ய முடியாத நிலையில் அவர்களுக்கு தகுந்த மருத்துவ பராமரிப்பு தேவைப்படுகிறது. குறிப்பிடத்தக்க எயிட்ஸ் மக்கள்தொகை உடைய நாடுகளில் இது சமூக பொருளாதாரங்களின் சரிவை ஏற்படுத்தும் என்பதே இத்தகைய நோய்த்தாக்கத்தின் முன்னறிவிப்பாகும். நோய்ப்பாதிப்பு கடுமையாக உள்ள சில பகுதிகளில் இந்நோய்பரவல் வயதான தாத்தா பாட்டிகளால் பராமரிக்கப்படும் நிலையிலுள்ள பல அனாதைகளை விட்டுச் சென்றிருக்கிறது.
இப்பகுதிகளின் அதிகரித்திருக்கும் இறப்புவிகிதம் பணியாளர் சமுதாயத்திலும் தொழில் அனுபவமுடையோர்களின் எண்ணிக்கையிலும் பெரும் சரிவை ஏற்படுத்துகிறது. இங்ஙனம் சரிவடைந்த பணியாளர் சமுதாயமும் பெருமளவில் குறைந்த ஞானமும் பணி அனுபவமும் உடைய இளைஞர்களைக் கொண்டிருப்பதால் இது குறைந்த உற்பத்திக்கு வழிவகுக்கும். நோயுற்ற குடும்பத்தினரை பார்த்துக்கொள்ளவோ, தான் நோயுற்றிருக்கும் நிமித்தமாகவோ பணியாளர்களால் அனுபவிக்கப்படும் மருத்துவ விடுப்பும் உற்பத்தியைக் குறைக்க வல்லது. வருமான இழப்பு மற்றும் பெற்றோரின் மரணம் மூலம் மனித முதலீட்டையும், மக்களின் பேரில் முதலீடு செய்வதையும், பெருக்குவதற்கான நுட்பங்களை அதிகரிக்கப்பட்ட இறப்புவிகிதம் பலவீனப்படுகிறது. இளைஞர்களை பெருமளவில் கொல்வதன் மூலம் வருமான வரி செலுத்தும் மக்கள் தொகையை கணிசமாகக் குறைத்து கல்வி மற்றும் நலப் பணி எயிட்ஸ் அல்லாத பொது செலவினங்களுக்கான ஆதாரத்தைக் குறைத்து நாட்டில் நிதி நெருக்கடியையும் பொருளாதார பின்னடைவையும் ஏற்படுத்துகிறது. இது வரியாதாரத்தின் வளர்ச்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதோடல்லாமல் நோயாளிகளுக்கான சிகிச்சை, நோய்ப்பட்ட பணியாளர்களுக்குப் பதிலாக பணியமர்த்தியிருக்கும் ஊழியர்களுக்கான பயிற்சி, மருத்துவ விடுப்பூதியம் மற்றும் எயிட்ஸ் அனாதைகள் பராமரிப்பு போன்ற அதீத செலவுகளால் வரியாதார வளர்ச்சிப் பின்னடைதலை அதிகரிக்கிறது. வயது வந்தோர்களின் இறப்பு விகித அதிகரிப்பினால், அநாதைகளைப் பராமரிக்கும் பொறுப்பும், நிந்தனையும் குடும்பத்திலிருந்து அரசுக்கு மாற்றப்படும் பொழுது இத்தகையதொரு சூழ்நிலை ஏற்படுகிறது. வீட்டளவில் எயிட்ஸ் நோய் வருமான இழப்பையும் உடல்நல பேணுதலில் செலவு அதிகரிப்பையும் விளைவிக்கறது. இத்தகைய வருமான இழப்புகள், செலவு குறைப்பு நடவடிக்கைகளையும், படிப்பிற்கு பதிலாக உடல் நலம் பேணுதல் மற்றும் மயான செலவுகளில் ஈடுபடும் மாற்று விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. எச் ஐ வி /எயிட்ஸ் நோயாளி இருக்கும் இல்லங்கள் மற்றவைகளை விட இருமடங்கு மருத்துவச் செலவுகளுக்காளாவதாக, கோட் டி ஐவாய்ர் ஆய்வு தெரிவிக்கிறது.
இலங்கையில் எயிட்ஸ்
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எச்.ஐ.வி/எயிட்ஸ் தாக்கமும் பரவல் விகிதமும் குறைவாக உள்ளது. ஆனாலும், ஆபத்திற்குட்படக்கூடிய வாய்ப்பும் உள்ளது. பாலியற் தொழிலும் ஓரினச் சேர்க்கையும் இலங்கையில் எச்.ஐ.வி/எயிட்ஸ் பரவுவதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன.
2001 இல் எச்.ஐ.வி/எயிட்சுடன் வாழ்வோர் எண்ணிக்கை 7500 ஆக இருந்தது 2011 இல் 2800 ஆக குறைந்துள்ளது. இதனால் எச்.ஐ.வி/எயிட்சுடன் வாழ்வோரைக் கொண்ட 162 நாடுகளில் இலங்கை 129வது இடத்தில் உள்ளது. இலங்கையில் எச்.ஐ.வி/எயிட்ஸ் பரவல் விகிதம் 0.1 வீதமாகக் காணப்படுகையில் பெண்கள் நோய்த் தாக்கத்திற்குள்ளாகும் வீதம் கூடுதலாகக் காணப்படுகிறது. எச்.ஐ.வி/எயிட்சுடன் வாழும் ஆண், பெண் விகிதம் 1.4 க்கு 1 என உள்ளது.
தற்போதைய நிலைமை ?
ஆனால் தறபோதைய நிலைமை அவ்வாறே நீடிப்பதாகத் தெரியவில்லை. தற்போது கிடைக்கப் பெறும் தகவல்கள் பயத்தையும் ஆச்சரியத்தையும் உண்டு பண்ணுகின்றன. உதாரணமாக,
யாழ் நகர்ப் பகுதியில் 17 வயதுச் சிறுமிக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாக யாழ்ப் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. யாழில் நாள் ஒன்றுக்கு சராசரியாக தன்னை 3 ஆண்கள் பாலியல் தொடர்பு கொண்டதாக குறிப்பிட்ட சிறுமி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
வன்னியில் தாய், தந்தையை இழந்த இச் சிறுமியை அழைத்து வந்த பெண் யாழ் நகருக்கு அண்மையில் தனது வீட்டில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகத் தெரியவருகின்றது.
இதில் அதிர்ச்சி அடைய வேண்டிய சில முக்கிய விடயங்கள்
குறித்த சிறுமியை தொடர்பு வைத்த பல நூற்றுக் கணக்கான ஆண்களின் நிலை என்ன???
இந்த ஆண்களால் ஏனைய பெண்களுக்கும் எயிட்ஸ் பரவும் ஆபத்தை எவ்வாறு தடுப்பது?
சிறுமியுடன் தொடர்பு கொண்ட குடும்பஸ்தர்களின் மனைவிகளுக்கும் , அவர்களின் வயிற்றில் வளரும் கருவுக்கும் ஏற்படப் போகும் ஆபத்துக்கள் என்ன?
இவ்வாறு தவறான முறையில் உறவு கொண்டவர்கள் இந்தச் செய்தியை அறிந்து யாழ் போதனா வைத்தியசாலையை நாடி வந்தால் யாழ் போதனா வைத்தியசாலை சரியான முறையில் அவர்களை பரிசோதனை செய்யும் அளவில் இருக்கின்றதா??
நாம் அறிந்த வகையில் யாழ் போதனா வைத்தியசாலைப் பிரிவில் எயிட்ஸ் சோதனைப் பிரிவு செயலிழந்த நிலையிலேயே காணப்படுகின்றது. இந்தச் சிறுமியின் விடயமும் சிறுமி கர்ப்பம் தரித்திருந்த வேளையே அறியப்பட்டது. அதுவும் இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பபட்டே சோதனை செய்யப்பட்டது என்கிறது மற்றொரு தகவல்.
எயிட்ஸ் பரப்பும் கசினோக்கள்
ஓர் இலட்சத்துக்கும் மேற்பட்ட விபச்சாரத்தை தொழிலாக செய்பவர்கள் இலங்கையில் இருப்பதாக நம்பப்படுகிறது. இவர்களில் எத்தனை பேர் நோய்க் காவிகளாக இருப்பார்கள். பாதுகாப்பான வழிவகைகளைக் கையாளும்போதும் உடல் திரவம் தொடர்பு ஏற்பட்டுவிட்டால் நிலைமை என்னவென்பதை யோசிக்க வேண்டும். இது போதாக்குறைக்கு சுற்றுலாத் துறையை வளர்ப்பது என்ற பெயரில் சர்வதேச மட்டத்தில் எயிட்சை வளர்த்து விடுவதும் நோயைக் கொடுத்து பணம் சம்பாதிக்கவுமே காடையர்கள் முனைகிறார்கள். அதற்கு அரசும் ஒத்தூதுகிறது.
அரசும் குற்றவாளியே !
- விபச்சாரத்தை தொழிலாக கொண்டு நடத்துபவர்களும் விபச்சாரிகளும் நாளுக்கு நாள் பெருகுவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்தி நடவடிக்கை எடுக்காததே காரணமாகும்.
- கடுமையான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிருத்தாததால் அரசும் எயிட்சால் மக்கள் அவதிப்படுவதற்கு காரணமாகிறது.
- சிறுவர்கள் பாலியல் ரீதியாக தூண்டப்பட காரணமாக இருக்கும் ஆபாச சினிமாக்களையும் விளம்பரங்களையும் தடை செய்யாமல் இருப்பது,
- கலை என்ற பெயரில் கலாசாரத்தைச் சீரழிக்கும் சினிமா சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை முடக்காமல் வளர்த்துக் கொண்டிருப்பது,
- ஆடவர்களை, கற்பழிப்பு மற்றும் கொலை போன்ற குற்றங்களுக்கு தூண்டிவிடக் கூடிய பெண்களின் ஆடையில் கட்டுப்பாடுகளை விதிக்காமல் இருப்பது,
- ஆபாசப் படங்களை விநியோகிக்கக் கூடிய கடைகளுக்கும் தொலைக்காட்சி அலை வரிசைகளுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்காதது,
- பொது இடங்களில் முறைகேடாக நடக்கும் நபர்களைத் தண்டிக்காமல் அவற்றை அனுமதிப்பது மற்றும் தூண்டுவது,
- ஓரினச் சேர்க்கைக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கையை எடுக்காதது,
- மதுபானக் கடைகளுக்கு முடிவு கட்டாமல் மேலும் மேலும் அனுமதிப்பத்திரங்களை வழங்குவது,
- கசினோ போன்ற விபச்சார நிலையங்களை சட்ட ரீதியாக அனுமதிப்பது மற்றும் மக்களின் நலனில் அக்கறையில்லாது வருமானத்தை மாத்திரம் இலக்காகக் கொண்டு செயற்படுவது,
- எயிட்ஸ் குறித்து விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தாமல் கண்துடைப்புக்காக வேலை செய்வது,
- பொது மக்களை HIV சோதணைக்குட்படுத்தி தேவையான மருந்துகளை வழங்கக் கூடிய நிலையில் பிராந்திய மத்திய நிலையங்களை ஏற்படுத்தாமல் இருப்பது என்று பல்வேறு வழிகளில் அரசாங்கமும் எயிட்ஸ் நோய்க்கு காரணமாகிறது. எனவே இதற்கான ஆக்கபுர்வமான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்வது அதன் கடமையாகும்.
எய்ட்ஸ் தெரிந்து கொள்ள வழி
எச்.ஐ.வி தொற்றடைந்தோர் நீண்டகாலம் செல்லும் வரை எவ்வித நோயறிகுறிகளையும் வெளிக்காட்டுவதில்லை. எனவே புறத்தே தென்படும் பண்புகளை கொண்டு அவர்களை இனம்காண முடியாது.எச்.ஐ.விதொற்றடைந்துள்ளோரை இனம்காணப்படுவதற்கு மிகச் சிறந்த முறை அவர்களது இரத்தத்தில் அடங்கியுள்ள எச்.ஐ.வி பிறபொருளெதிரிகளை இனம்காண்பதாகும். இதற்காக இரண்டு வகை இரத்தச் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
முதலாவதாக நடத்தப்படும் இரத்தச் சோதனை, எலைசா சோதனையாகும். இது இனம்காணல் பரிசோதனை எனப்படுகிறது. எலைசா சோதனையானது எச்.ஐ.வி தொற்று அல்லாத பிற காரணங்கள் தொடர்பாகவும் நேர் வகை பெறுபேற்றை தர இடமுண்டு. வெஸ்டர்ன் புலொட் சோதனை இது உறுதிப்படுத்தும் சோதனையாகும். எலைசா சோதனையில் நேர் வகையை காட்டும் ஒவ்வொரு இரத்த மாதிரியும் வெஸ்டர்ன் புலொட் சோதனைக்கு உட்படுத்தப்படும். இது ஒரு சிறப்பான சோதனையாகும். இரத்த வகையில் எச்.ஐ.வி பிறபொருளெதிரி காணப்பட்டால் மாத்திரமே இச் சோதனையின் போது பெறுபேறு காட்டப்படும்.
எலைசா சோதனை, வெஸ்டர்ன் புலொட் சோதனை ஆகிய இரண்டு சோதனையிலும் நேர்(+ )வகை காணப்பட்டால் எச்.ஐ.வி பிறபொருளெதிரி உண்டு என்பது அல்லது எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளது என்பது உறுதியாகும்.
யாரெல்லாம் எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொள்ளலாம்?
தமது பாலியல் நடத்தைகள் தொடர்பாக ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டால் அல்லது ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் சந்தேகப்படுவதாக இருந்தால், மேலும் வேலை வாய்ப்புப் பெறுவதற்கோ வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெறச் செல்வதற்கோ முன் தேவையாகக் கருதப்படும் சந்தர்ப்பத்தில் இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியமானதாகும். அதேபோல இரத்ததானம் செய்யப்படும்போது இரத்த மாதிரி ஒவ்வொன்றிலும் எச்.ஐ.வி தொற்றுக் காணப்படுகின்றதா என்பதை அறிதல் அவசியம். இத்தகைய சந்தர்ப்பங்களில் இரத்த சோதனைகள் செய்து கொள்ளல் வேண்டும். மேலும், சுய விருப்பின் பேரிலும் ஒருவர் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளலாம். இத்தகைய இரத்த சோதனைகள் பாலியல் நோய்கள் தொடர்பான வைத்திய நிலையங்களிலும், அரசாங்க, தனியார் வைத்தியசாலைகளிலும், இரத்தப் பரிசோதனையை மேற்கொள்ளும் ஆய்வுகூடங்களிலும், விசேட இரத்த பரிசோதனைக் கூடங்களிலும் இச்சோதனைகளை செய்து கொள்ளலாம். எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக அறுவுத்தலானது மிக உறுத்துணர்வுடைய ஒன்றாக அமையக் கூடுமாதலால் சோதனைப் பெறுபேற்றை அறிந்து கொள்ளத்தக்க வகையில் அவரைத் தயார்படுத்த வேண்டியது அவசியமாகும். இரத்தச்சோதனைக்கு உள்ளானவருக்கே சோதனை தெரிவுகள் வழங்கப்படும். அதன் அந்தரங்கத் தன்மையைப் பேணுவது சுகாதார ஊழியர் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும். நோய் பற்றித் தீர்மானிப்பதற்காக எச்.ஐ.வி சோதனை நடத்துதல். இச் சோதனை தெரிவுகள் அதனைக் கோரிய வைத்தியருக்கு மாத்திரமே வழங்கப்படும். ஒவ்வொரு சுகாதார ஊழியரும் சோதனையின் அந்தரங்கத் தன்மையைப் பேணக்கடமைப்பட்டுள்ளனர்..
எயிட்ஸ் மருந்துகள்
HIV தொற்று ஏற்பட்ட பின்பு அதனை முற்றாக அழிக்க இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாகவே எயிட்ஸைக் குணப்படுத்த முடியாத நோயாக கூறப்படுகின்றது. இருப்பினும் HIV கிருமிகள் உடலினுள் பரவும் வேகத்தை குறைக்கக் கூடிய மருந்துகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. நோய்த் தொற்றுக்களுக்கான சிகிச்சையுடன் இந்த மருந்துகளையும் முறையாகப் பயன்படுத்தினால் HIV பாதிப்பு உள்ளவர்கள் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் உயிர் வாழக்கூடிய நிகழ்தகவு உண்டு.
HIV யைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் பொதுவாக ”’ என்டி ரெட்ரோ வைரல் மருந்துகள்”’ (Anti reteoviral Drugs) என்று அழைக்கப்படுகின்றன. இம்மருந்துகள் பல்வேறு நிறுவனங்களின் மூலம் மூன்று நிலைகளில் கிடைக்கின்றன. இவை இரத்தத்தில் கலந்துள்ள வைரசின் எண்ணிக்கையைக் குறைப்பதுடன், அவை பரவுவதையும் கட்டுப்படுத்துகின்றன. மருந்துகளில் ஏற்படும் ஒவ்வாமையைக் குறைக்க பொதுவாக என்டி ரெட்ரோ வைரல் (Anti reteoviral Drugs) மருந்துகளை கலப்பு சிகிச்சை முறையில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
என்டி ரெட்ரோ வைரல் மருந்துகளை பயன்படுத்துபவர்கள் முறையாகவும், தொடர்ச்சியாகவும் சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகும். HIV க்காக மாத்திரமல்லாமல் அபாயகரமான வைரஸ் தொடர்பாக எத்தகைய தொற்றுக்களுக்கும் இது பொருந்தும். சிகிச்சை மேற்கொள்ளப்படுவது மாத்திரமன்றி வைத்தியர்களின் ஆலோசனைப்படி உரிய மருந்தை உரியநேரத்தில் உட்கொள்ளுதல் அவசியமானதாகும். மாறாக தான் நினைத்தவாறு மருந்துகளை உட்கொண்டால் அதன் பலன் குறைவாகவே இருக்கும். மேலும், தொடர்ச்சியாக மருத்துவரை உரிய நேரத்தில் சந்தித்து ஆலோசயைப் பெறுவதினூடாக, தான் உட்கொள்ளும் மருந்தின் ஆற்றலை அறிந்து கொள்ளவும் அல்லது அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை அறிந்து விரைவாக அவற்றைப் போக்கிக் கொள்ளவும் முடியுமானதாக இருக்கும். ஒரு முறை ஆன்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகளை பயன்படுத்த ஆரம்பித்து விட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அம்மருந்துகளை பயன்படுத்த வேண்டும். எனினும் இம்மருந்து வகைகளுக்கு அதிக பணம் செலுத்தவேண்டியதால் சிலர் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் தற்போது இம்மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டிருக்கிறது.
அதேநேரம், HIV ஆனது இம் மருந்து வகைகளுக்கு இசைவாக்கமடைந்து எதிர்ப்பைக் காட்டும் ஆபத்து நிலையும் தற்போது உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் HIV தொற்றடைந்தோருக்காகப் பெரும்பாலும் ஏக காலத்தில் இரண்டு அல்லது மூன்று வகை மருந்துகள் வழங்கப்படுவதுண்டு. இவ்வாறான நிலைமைகளில் வைரஸின் இசைவாக்கத்தன்மை குறைவடையலாம்.
HIV தொற்றுக்கு பெரும்பாலும் பின்வரும் மருந்து வகைகளே பயன்படுத்தப்படுகின்றன.
1.Nucleoside analogues
2.NonNucleoside reverse trancriptasinhibirors
3.Protese inhibitors
இந்த மருந்து வகைகள் வெவ்வேறு வர்த்தகப் பெயரில் சந்தையில் காணப்படுகின்றன.
“ஸ்டெம் செல்‘ சிகிச்சை
ஸ்டெம்செல்கள் எனப்படும் குருத்து உயிரணுக்களை மாற்றியமைத்து, அவற்றை எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் செலுத்தி, அதன்மூலம் எயிட்ஸ் நோயை குணப்படுத்த வாய்ப்பிருப்பதாக கலிபோர்னிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
பரிசோதனைக் கூடத்தில் எலிகள் மத்தியில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் இந்த முயற்சி நம்பிக்கையளிக்கக்கூடிய பலன்களைத் தந்திருப்பதாகவும், எயிட்ஸ் நோய்க்கு எதிரான மருத்துவ உலகின் போராட்டத்தில் இது முக்கிய முன்னேற்றம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
மனிதர்களை தாக்கும் எச் ஐ வி கிருமியானது, மனித உடலில் புகுந்ததும் குறிப்பிட்ட திசுக்களை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. பின்பு அங்கிருந்தபடி பல்கிப்பெருகி ரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்புச்செல்களை தாக்கி அழிப்பதன் மூலம் எயிட்ஸ் நோயை உருவாக்குகின்றன. இதை குணப்படுத்தாவிட்டால் மரணத்தில் முடியும்.
இந்த எச் ஐ வி கிருமியின் உயிர்ச்சுழலில், அவை தங்கியிருக்கும் திசுக்களை குறிவைத்துச் செல்லக்கூடிய வகையில் குருத்து உயிரணுக்களை ஆய்வாளர்கள் முதலில் மாற்றியமைத்தனர். இப்படி மாற்றியமைக்கப்பட்ட குருத்து உயிரணுக்களை எயிட்ஸ் தாக்கிய எலிகளின் உடலில் செலுத்திய சில நாட்களில் அந்த எலிகளின் ரத்தத்தில் இருந்த எச் ஐ வி தொற்றின் அளவு குறைந்திருப்பதையும், நோய் எதிர்ப்புச்செல்கள் அதிகரித்திருப்பதையும் இவர்கள் கண்டுபிடித்தனர். இதன்மூலம் குருத்து உயிரணுக்களை பயன்படுத்தி எயிட்ஸ் நோயை குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.உயிர்கொல்லி நோயான எயிட்சை, “ஸ்டெம் செல்’ சிகிச்சை மூலம் இரண்டு நோயாளிகள் முற்றிலுமாக குணப்படுத்தப்பட்டுள்ளனர். மலேசியாவின், கோலாலம்பூர் நகரில், சர்வதேச எயிட்ஸ் சங்கத்தின் மாநாடு கடந்த வாரம் நடந்தது. அதில், பங்கேற்ற, ஹார்வர்டு மருத்துவ பள்ளியின் டாக்டர், டிமோத்தி ஹென்ரிச், தனது ஆய்வின் முடிவை கூறியுள்ளார்.
மேலும் ஹென்ரிச் கூறியதாவது: எயிட்சால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, “ஆன்ட்டி ரிட்ரோவைரல்’ என்னும் மருந்து அளிக்கப்படுகிறது. அவர்களில், இரண்டு நோயாளிகளுக்கு, இந்த மருந்துக்குப் பதிலாக, ரத்த அணுக்களை மாற்றும், “ஸ்டெம் செல்’ தெரபி அளிக்கப்பட்டது. இதற்காக, அரிய வகை ரத்த அணுக்களான, “சிசிஆர்5 டெல்டா 32′ என்னும் ஸ்டெம் செல்கள், மற்றவர்களிடம் இருந்து பெறப்பட்டு, நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டது. இந்த சிகிச்சைக்குப் பின், அவர்களின் ரத்த மாதிரியை சோதனை செய்தபோது, அதில், எயிட்ஸ் இருந்ததற்கான அறிகுறிகள் இல்லை. அவர்களுக்கு, ஆன்ட்டி ரிட்ரோவைரல் மருந்து தருவது நிறுத்தப்பட்டு, ஒருவருக்கு, 15 வாரங்களும், மற்றொருவருக்கு 7 வாரங்களும் ஆகிவிட்டன என பிரிதொரு தகவல் சொல்கிறது.
பெர்லின் நோயாளி
கடந்த 2007ல், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மூலம் குணமான முதல் எயிட்ஸ் நோயாளி, ஜெர்மன் நாட்டின், பெர்லினைச் சேர்ந்தவர். எனவே, இந்த சிகிச்சைக்கு, “பெர்லின் நோயாளி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்கு அதிகம் செலவாகும் என்பதால், அனைத்து நோயாளிகளும் இந்த சிகிச்சை பெற முடியாது.
கடந்த 2007ல், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மூலம் குணமான முதல் எயிட்ஸ் நோயாளி, ஜெர்மன் நாட்டின், பெர்லினைச் சேர்ந்தவர். எனவே, இந்த சிகிச்சைக்கு, “பெர்லின் நோயாளி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்கு அதிகம் செலவாகும் என்பதால், அனைத்து நோயாளிகளும் இந்த சிகிச்சை பெற முடியாது.
இந்நோய் கண்டுபிடிக்கப்பட்டு, 30 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளாகத் தான் இதைக் கட்டுப்படுத்தும் மருந்தான, “ஆன்ட்டி ரிட்ரோவைரல்’ பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்தியாவைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மலிவு விலையில், இம்மருந்துகளை, ஆப்பிரிக்கா மற்றும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
யார் குற்றவாளி ?
மேற்கத்திய சூறையாடும் பொருளாதார அமைப்பு அந்த நாடுகளை அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியாகக் கட்டுப்படுத்தி, அவர்களின் இறப்பைத் தீவிரமாக்குகின்றனர். எயிட்ஸ் தடுப்புக்குப் பாதுகாப்பான பாலியல் உபகரணங்கள் வழங்காமை, நோய் விரிவாவதைத் தடுக்கும் மருந்து வழங்காமை போன்றன அந்த மக்களின் மீதான மேற்கத்திய வன்முறையாகும். ஏகாதிபத்தியங்கள் சர்வதேசக் குற்றவாளியாக இருப்பதுடன் கடும் தண்டனைக்குரியவர்கள் ஆவர்.
வறுமையான நாடுகளில் இது சாத்தியமற்ற நிலைமையை ஏற்படுத்தும் மேற்கின் சூறையாடும் பொருளாதாரக் கொள்கை மக்களை வறுமையூடாக எயிட்ஸ்க்குப் பலியாக்குகின்றது.
எயிட்ஸ் தொற்றும் வழிகளில் ஓரினச்சேர்க்கை முக்கியமான ஒரு பாலியல் தொடர்பு வழியாக உள்ளது. இது போல் விபச்சாரம் மற்றொரு வழியாகும். இவை இரண்டும் இயற்கையான பாலியல் தெரிவுகளுக்கு விரோதமான செயற்பாடுகளாகும். இவை இரண்டும் எயிட்ஸ் ஊடாக மக்களைப் பலி கேட்கின்றது. இதனுள் வறுமையைப் பிறப்புரிமையாகக் கொண்ட மக்களைச் சூறையாடுகின்றது.
ஆரோக்கியமான பாலியல் உறவு சமுதாயத்தில் நிலவும் பட்சத்தில் இந்த எயிட்ஸ் இந்தளவு வேகத்தில் பரவாது. சமுதாயத்தில் முறைகேடான பாலியல் தொடர்புகள், மிருகத்துடனான உறவு, ஓரினச்சேர்க்கை, பொதுவிபச்சாரம் போன்ற இயற்கைக்குப் புறம்பான பாலியல் தொடர்புகளால் இந்நோய் தோன்றவும், தொற்றவும் காரணமாகிறது.
குடும்பப் பெண்களின் கணவன்மார் அப்பெண்ணை விட்டு வேறு பெண்ணுடன் தொடர்பு கொள்வதையும், பெண் வேறு உறவை வைத்திருப்பதையும் அம்பலப்படுத்துகின்றது. இது யாருக்கு முதலில் ஏற்பட்டது என்பதே அவர்கள் அந்த உறவுமுறையை மீறியவர்களாக இருப்பதை யதார்த்தமாக்குகின்றது.
நாகரிகமான, கௌரவமான சமுதாயத்தின் பிரதிநிதிகளில் இந்த நோய் தொற்றுவதும் இதே காரணத்தால்தான் என்பதும் அம்பலமாகின்றது. மருத்துவ உதவி தேடி தமது பணப்பலத்தால் வரும் போது இவர்களின் கல்வித் தரம் நிர்வாணமாகின்றது. சமுதாயத்தில் இந்நோய்க்கூறு அனைத்துத் தரப்பையும் பாலியல் நெருக்கடியூடாகத் தொற்றுவதை உறுதிசெய்கின்றது. இது வறிய மக்கள் இடத்தில் வேகமாகத் தொற்றுகின்றது. இதில் நுகர்பவன் அந்த நோயை நுகராத பெண்களுக்கு காவிச் சென்று கொடுப்பதன் மூலம் அப்பாவிப் பெண்களையும் சேர்த்தே பலியிடுகின்றனர்.
ஐ.நா.மன்ற எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி கௌரவ (?) தூதராக கமல்
எய்ட்ஸ் நோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய பிரச்சார நடவடிக்கையில் கௌரவத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள சினிமா நட்சத்திரம் கமலஹாசன், “ஹெச்.ஐ.வி. தொற்று வந்தவர்கள் பாவிகள் அல்ல” என்கிறார். தமிழகத்தின் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஐ.நா.மன்றத்தின் கௌரவத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் கமலஹாசன், எயிட்ஸ் வந்தவர்களை அங்கீகரிக்காத சமூகம் ‘ஜன்னல் இல்லா வீடு’ என்றும் அங்கு சுவாசிக்க முடியாது என்றும் அவர் ஒரு பேட்டியில் தெரிவிக்கிறார்.
உலகம் முழுக்க எயிட்ஸ் பரவுவதற்கு முக்கிய காரணமாக செயற்படுவோர் சினிமாக்கார தெருக் கூத்தாடிகளே. சிறு வயது முதல் பெரியவர்கள் வரை முறைகேடான பாலியல் நடத்தைகளுக்கும் கற்பழிப்பு, சிறுவர் துஷ்பிரயோகம், கொலை என்று இத்தனைக்கும் 99 சதவீதம் காரணமானவர்கள் சினிமாவைச் சேர்ந்தவர்களே. இப்படி இருக்கும் போது ஐ நா கேடுகெட்ட சினிமாக்காரனை சிறப்யபுத் தூதுவராக நியமிப்பபுது எயிட்ஸை ஒழிக்கவா ? அல்லது பெருக்கவா என்பதை யாரும் இலகுவாக புரிந்து கொள்ளலாம்.
மூன்றாம் உலக மக்களுக்கு குறைந்த விலையில் மருந்தகளை இந்தியா விற்பதற்கு மேற்குலகம் எதிர்ப்பு
காப்புரிமை பாதுகாப்பு இல்லாமல் இந்தியாவில் தயாரிக்கப்படும் எயிட்ஸ் நோய்க்கான பொது மருந்துகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இந்திய அரசிடம் நடத்திவரும் பேச்சுவார்த்தைகளை எதிர்த்து புது தில்லியில் ஆர்பாட்டம் நடத்திய ஐவர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மருத்துவத்துறையில், காப்புரிமை சட்டங்களால் கட்டுப்படுத் தப்படாமல் தயாரிக்கப்படும் மருந்துகள் ஆங்கிலத்தில் ஜெனரிக் மெடிசின் என்கிற பெயரில், அதாவது பொதுத்தன்மையிலான மருந்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் இத்தகைய பொதுத்தன்மை மருந்துகள்தான் உலக அளவில் இருக்கும் 80 சதவீத குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் எயிட்ஸ் நோயாளிகளுக்கு பயன்படுவ தாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் தயாரிக்கப்படும் இத்தகைய மருந்துகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையர்கள் தற்போது இந்திய அரசிடம் நடத்திவரும் பேச்சுவார்த்தைகளை எதிர்த்து செயற்பாட்டாளர்கள் இந்திய தலைநகர் தில்லியில் நடத்திய ஆர்பாட்டத்தில் அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடை யில் வன்முறை மோதலாக மாறியதாக ஆர்பாட்டக்காரர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொது மருந்துகள் தொடர்பில் இந்திய அரசுடன் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் நடத்திவரும் பேச்சுவார்த்தைகள் தவறு என்று எல்லைகளை கடந்த மருத்துவர்களுக்கான அமைப்பு பிரச்சாரம் செய்துவருகிறது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் எயிட்ஸ் நோய்க்கான பொது மருந்துகளுக்கு காப்புரிமை அளிக்கப்பட்டால், எயிட்ஸ் நோய்க்கான மலிவு விலை மருந்துகள் கிடைக்காமல் போய்விடும் என்பது இந்த அமைப்பின் வாதம். இது உலக அளவில் மலிவு விலையிலான ஆண்டி ரெட்ரோவைரல் மருந்துகளை நம்பியுள்ள சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் எயிட்ஸ் நோயாளிகளை பாதிக்கும் என்றும் இவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
மேற்கைத்தேய ஆதிக்க சக்திகள் திட்டமிட்டு நோயை உண்டாக்கி விட்டு கிடைக்கின்ற மருந்துகளுக்கும் தடைவிதித்து மூன்றாம் உலக மக்களை அடிமைப்படுத்தி அழிக்க நினைக்கின்றார்கள் என்பதை இதன் மூலம் விளங்கிக்கொள்ளலாமல்லவா ?
எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி ஆர்வலர் கைது
சீனாவில் மிகப் பிரபலமான எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி ஆர்வலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கலப்படமான சுகாதாரமற்ற ரத்த வங்கிகள் மூலம் எய்ட்ஸ் தொற்று ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு நஷ்ட ஈடு வாங்கி தர டியான் சீ என்ற இந்த ஆர்வலர் போராடி வந்ததாகவும், இதனை தடுப்பதற்காக சீன அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கடந்த 1990 ஆம் ஆண்டுகளில் சீனாவில் ரத்தம் விற்பதில் நடைபெற்ற முறைகேட்டில் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு சுகாதாரமற்ற கலப்படமான ரத்தம் கொடுக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டன. இவ்வாறு எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுத்ததற்காக அவர்களுக்கு நஷ்ட ஈடு கேட்டு போராடியதற்காக கைது செய்யப்பட்டார் என்றால் எயிட்ஸ் நோயை வளர்க்க வேண்டும் அதன் மூலம் உலகை நாசப்படுத்த வேண்டும் என்று சிந்திப்பவர்கள் உண்டு என்பதை புரிந்து கொள்ள முடியுமல்லவா ?
இறுதியாக
இவையத்தனை சான்றுகளையும் வைத்துப் பார்க்கும் போது எயிட்ஸ் இயற்கையாக இன்றி வேண்டுமென்றே சுய நலனுக்காக மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கவும் அவர்களை அழிக்கவும் உலக அமைதியை நாசப்படுத்தவும் சூழ்ச்சி செய்யும் சதிகாரக் கும்பலின் வேலையென்பது தெளிவாகிறது. எனவே மக்கள் விழிப்பாக செயற்படுவது அவசியமாகிறது.
முத்தான பத்து ஆலோசனைகள்
1. ஆண் விருத்தசேதனம் செய்தல்
ஆண்கள் விருத்தசேதனம் செய்து கொள்வது ஈரினத்தவர்களிடையே எச் ஐ வி நோய்த்தொற்று அபாயத்தை அறுபது சதவிகிதம் குறைக்கின்றன என சுற்று மாதிரி கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் தெரிவிக்கின்றன. இது பல நாடுகளில் உத்வேகத்துடன் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.
முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுகின்ற மிக முக்கியமான மார்க்கம் போதிக்கக் கூடிய 100 சதவீத முஸ்லிம்கள் கடைப்பிடிக்கின்ற ஒன்றாக இது காணப்படுகிறது.
2. நம்பிக்கையானவர்களோடு மாத்திரம் உடலுறவு
80 சதவீத எயிட்ஸுக்கு காரணம் பாதுகாப்பற்ற உடல் உறவுதான் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
என்பதை முன்னரே நாம் பார்த்தோம். உடலுறவு என்ற செயற்பாட்டை தங்களுக்கென்று சொந்தமானவரோடு நம்பிக்கைக்குரியவரோடு மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர். உண்மையாக இருத்தல் வேண்டும். பாலுறவு நடத்தைகள் நபருக்கு நபர் வேறுபடுவதால் ஒருவருக்கொருவர் நம்பிக்கையோடு இருத்தல் அவசியமானதாகும். இச்சந்தர்ப்பத்தில் ஒருவர் மற்றொருவரை உண்மையாக இருக்க வலியுறுத்த வேண்டும். மேற்கத்தேய நாடுகளைப் போல எண்ணற்ற நபர்களுடன் உடலுறவு கொள்வதை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். இதே போல் அடிக்கடி உடலுறவு கொள்வோரை மாற்றுவதையும் இயலுமான வரை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.
இன மற்றும் மத ரீதியாக ஆய்வு செய்து பார்த்தால் குறைவாக எயிட்ஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் முஸ்லிம்களே ஆவர். காரணம் முறையற்ற பாலியல் நடத்தைகளுக்கு இஸ்லாம் கூறும் தண்டனைகளும் மறுமையில் இதனால் வழங்கப்படும் நரக வேதனை பற்றிய நம்பிக்கையுமாகும்.
விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது. (திருக் குர்ஆன் 17.32)
நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். (திருக் குர்ஆன் 23.1-6)
விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும். விபச்சாரம் செய்தவன், விபச்சாரம் செய்தவளையோ இணை கற்பிப்பவளையோ தவிர மற்றவர்களை மணந்து கொள்ள மாட்டான். விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள். இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது. (திருக் குர்ஆன் 24.2,3)
இது திருமணமாகாதவர்களுக்கே தவிர திருமணமானவர்களெனின் கல்லெறிந்து கொள்ள வேண்டும். (புகாரி 2725)
ஓரினச் சேர்க்கையாளர்களை அல்லாஹ் கல் மழை பொழிந்து அழித்தான். (திருக் குர்ஆன் 7.84)
03. போதைப் பொருள் பாவனையை விட்டு முழுமையாக விலகிக் கொள்ளுதல்
புகையிலை, மது, கஞ்சா, அபின் மற்றும் ஊசி மூலமான போதைப் பொருட்களை உபயோகிப்பதால் புத்தி தடுமாற்றம் கொண்டு விபச்சாரத்தின் பக்கம் நாடுவதாலும் முறையற்ற பாலியற் செயற்பாடுகள் நடைபெற்று விடுலதற்கும் போதை காரணமாகிறது.
நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள்,(குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா? (திருக் குர்ஆன் 5.90,91)
4. ஆபாசக் காட்சிகளைப் பார்ப்பதை விட்டும் விலகுதல்.
ஆபாசக் காட்சிகளே விபச்சாரத்தின் பால் தூண்டக்கூடியதாக உள்ளது. எனவே அவற்றைப்பார்ப்பதை விட்டும் பார்வையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள் ( திருக் குர்ஆன் 24.31 )
5. எப்போதும் அவதானமாக நடத்தல்.
குருதி ஏற்றுதல், குருதி வழங்குதல், முடி திருத்தி சவரம் செய்தல், ஊசி மருந்துகளை ஏற்றுதல் மற்றும் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் என்பவற்றில் எப்போதும் கவனமாக இருத்தல்.
6.பாலியல் கல்வி குறித்தும் எயிட்ஸ் குறித்தும் சமூகத்தில் விழிப்பணர்வை ஏற்படுத்துதல்.
எயிட்ஸ் நோய் பற்றி முழுமையான அறிவை பெற்றுக் கொள்வதோடு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் அந்த அறிவை பெற்றுக் கொள்ள வழிவகைகளைச் செய்தல். அதற்காக உழைத்தல், பொருளுதவி செய்தல்.
7. சரியான சிந்தனையை வளர்த்துக் கொள்ளுதல்
எயிட்ஸைப் பரப்பி உலகத்தை நாசப்படுத்த முனையும் விஷமிகள் முன்வைக்கும் ஆணுக்கு பெண் சரி நிகர் என்று பால் சமத்துவக் கொள்கையைப்பற்றி சிந்திக்காது நம்பி ஏற்றுக் கொண்டு அதற்காக வக்காலத்து வாங்குபவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இந்தக் கொள்கை தவறு என்பதை பல அறிவியல் சான்றுகள் மூலம் நிரூபிக்கலாம். ஆணினதும் பெண்ணினதும் எண்ணிக்கை, உடல் அமைப்பு, உடல் வலு, நோய் பரப்பும் தன்மை, உணர்ச்சிகள், தொழில் புரிவதன் சிக்கல்கள், விபச்சாரிகளின் எண்ணிக்கை, விதவைகளின் எண்ணிக்கை, மறுமனத்தின் நிலைமை, யுத்தம் மற்றும் விபத்துக்களில் உயிரிழப்புக்கள், மாதவிடாய் அற்றுப் போகும் காலம், சமுதாய மதிப்பீடுகள் என்று ஏராளமான சான்றுகள் ஒருவனுக்கு ஒருத்தி என்பது தவறு என்றும் பலதார மணம் அவசியம் ஆனால் ஒருத்திக்கு ஒருவன் தான் என்பதையும் நிரூபிக்கிறது.
8. சமூக அக்கறையோடு செயற்படுதல்.
யாருக்கு என்ன நடந்தால் எனக்கென்ன என்ற மன நிலை நாளை நானும் சீரழியும் நிலைக்குத்தான் கொண்டு போய் விடும். அரசாங்மோ அதிகாரிகளோ தவறிழைத்தால் தட்டிக் கேட்கவும் அநீதியை எதிர்த்து குரல் கொடுக்கவும் நீதியை நிலைநாட்டுவதற்காக போராடவும் முன்வருதல் வேண்டும்.
அவசரத் தேவைக்கு வைத்திய சாலையில் ஏற்றப்படுகின்ற குருதியின் மூலமே நம்முடைய எந்த தவறுகளும் இல்லாமல் HIV தொற்றுக்கு ஆளாக வேண்டியேற்படும்.
நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! ( திருக் குர்ஆன் 3.110 )
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன் ( திருக் குர்ஆன் 9.71 )
9. பொருத்தமான துணையை தெரிவு செய்தல்.
திருமணத்தின்போது பொருத்தமான வாழ்ககைத் துணையைத் தெரிவு செய்வது வாழுகின்ற காலம் முழுவதும் நிம்மதியாகவும் ஆரோக்கியமாக வாழவும் மறுமையில் வெற்றி பெறவும் அதிதயவசிய கடமையாகவும் பொறுப்பாகவும் இருக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த் திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் – புகாரி 5090
10. தன்னுடைய உடல் மற்றும் உள ஆரோக்கியத்தின் மீது அக்கறை எடுத்தல்.
ஒவ்வொருவரும் தன் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுக்க வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்நு சொல்லுவார்கள். எனவே எந்தப் பணியைச் செய்வதாக இருந்தாலும் ஆரோக்கியம் மிகவும் அவசியம். பாலியல் நோய்கள் குறித்தும் இன்ன பிற நோய்கள் குறித்தும் மிகுந்த அவதானத்தோடு இருக்க வேண்டும். தன்னிடமோ தன் துனையிடமோ மாற்றங்கள் மற்றும் நோயின் அறிகுறிகளை அறிந்து அவற்றுக்கான சிகிச்சைளை உரிய வகையில் பெற்றுக் கொள்ள வேண்டும்.sltj.lk
Post a Comment