கொஸ்லந்தை, மீரியபெத்த தோட்டத்தில் ஏற்ப்பட்ட பாரிய மண்சரிவினால் உயிர்யிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை இலங்கை மெதடிஸ்த திருச்சபையும், அதன் பெருந்தோட்ட சமுக மேம்பாட்டு திருப்பணி பிரிவும் தெரிவித்துள்ளது.
இலங்கை மெதடிஸ்த திருச்சபையும், அதன் பெருந்தோட்ட சமுக மேம்பாட்டு திருப்பணி பிரிவும் இணைந்து பதுளை கொஸ்லந்தை சம்பவம் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மெதடிஸ்த திருச்சபை தனது ஆழ்ந்த அனுதாபங்களை கொஸ்லந்தையில் உயிர்யிழந்தவர்களுக்காக வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவம்,
இம்மாதம் 29ஆம் திகதி புதன்கிழமை காலை 7.30 மணிக்கு கொஸ்லந்தை, மீரியபெத்த தோட்டத்தில் ஏற்ப்பட்ட பாரிய மண்சரிவினால் உயிர்யிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை இலங்கை மெதடிஸ்த திருச்சபையும், அதன் பெருந்தோட்ட சமுக மேம்பாட்டு திருப்பணி பிரிவும் தெரிவித்துக்கொள்கின்றது. மேலும் தனது பெற்றோரை இழந்து துன்புறும் பிள்ளைகள் மற்றும் உறவினர்களின் துயத்தில் பங்குகொள்வதோடு அவர்களுக்காக சிறப்பு பிரார்த்தனையையும் ஏறெடுத்து வருகின்றது.
இயற்கை அனர்தத்தில் பாதிக்கப்பட்டு துயறுரும் மலையக சமுகத்திற்கு தனது நேசகரத்தை நீட்டும் இலங்கை மெதடிஸ்த திருச்சபை, ஞாயிறு ஆராதனையில் இலங்கையில் உள்ள சகல மெதடிஸ்த ஆலயங்களிலும் உயிர் இழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்குமான சிறப்பு பிராத்தனையை ஏறெடுத்துவருகின்றது. மேலும் இன்று ஞாயிறு வழிபாட்டில் சேகரிக்கும் அனைத்து காணிக்கைகளையும், கொடைகளையும் கொஸ்லந்தையில் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும், மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவும் ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இதற்கான அறிவுறுத்தல்களை இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் பேராயர் அருள்காலாநிதி அ.வி.ஜெபநேசன் அவர்கள் இலங்கையில் உள்ள சகல மெதடிஸ்த திருச்சபைகளுக்கும் வழங்கியுள்ளார்.
மேலும் மெதடிஸ்த திருச்சபையானது, மீட்பு பணிகளை அரசாங்கம் துரிதப்படுத்தி இறந்த உடல்களை விரைவாக மீட்டு எடுத்து அவர்களை கௌரவமான முறையில் அடக்கம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும், பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுகின்றது. மலையக வரலாற்றிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி, அனைத்து இலங்கையர்களையும், உலக மக்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்தியுள்ள கொஸ்லந்த, மீரியபெத்த தோட்ட மண்சரிவு அனர்த்தம் இலங்கையர்கள் எம்மனைவருக்கு ஒரு நல்ல பாடத்தை கற்பித்துள்ளது. அதாவது இனிவரும் காலங்களிலாவது மலையக தோட்டத்தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான வீடு வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்க முன்வரவேண்டும் என்றும் அத்தோடு தோட்டக் கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பாக மேலும் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்றும், மலையக தொழில்சங்கங்கள் தமது மக்களுக்காக அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், இதற்கு பொது மக்களும், பல்சமய அமைப்புகளும் விழிப்புடன் இருந்து தனது அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்ற பலமான செய்தியையும் கொடுத்துள்ளது.
அழிவுகள் ஏற்பட்டப் பின்பு உதவுவதைப் பார்க்கிலும் முன் ஆயத்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதே சிறந்தது என்றும் இலங்கை மெதடிஸ்த திருச்சபை தனது அனுதாப செய்தியில் தெரிவித்துவுள்ளது. எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மலையக சமுகத்திற்கு உடனடியாக முன்வந்து உதவிக்கரம் நீட்டிய இலங்கை அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி, முப்படையினர், எதிர்க்கட்சி தலைவர் உட்பட அனைத்து அரசியல் தலைவர்கள், பொது அமைப்பினர், ஊடகங்கங்கள், பொதுமக்கள் அனைவருக்கும் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் பெருந்தோட்ட சமுக மேம்பாட்டு திருப்பணி பிரிவு கூட்டுமொத்த மலையக மக்களின் சார்பிலே தனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றது என இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் பெருந்தோட்ட சமூக மேம்பாட்டு திருப்பணியின் இணைப்பாளர் அருள்திரு.செங்கன் தேவதாசன் விடுத்துள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.
Post a Comment