(எஸ்.பி.நாதன்)
மட்டக்களப்பு பாரம்பரிய இசை நடனங்களைத் தொகுத்து அழகியலாக்கி வெளியரங்கில் அளிக்கும் நிகழ்ச்சியின் ஒத்திகை மட்டக்களப்பு கேற்றில் இன்று வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது.
தீபாவளி தினத்தன்று வசந்தம் தொலைக்காட்சியில் திரையிடப்படவுள்ள நிகழ்வுகள் கிழக்கு மாகாணத்திலுள்ள கலை பண்பாடுகளை வெளிப்படுத்தும் நோக்கோடு ஆட்டற்பயிற்சியாக இவற்றைத் தொகுத்துள்ளதாக பேராசிரியர் எஸ். மௌனகுரு தெரிவித்தார்.
கிழக்கு பல்கலைக் கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிலைய மாணவர்களினால் அரங்கேற்றபடவுள்ள இந்நிகழ்ச்சியின் நெறியாழ்கையை இசைத்துறை விரிவுரையாளர் பிரியதர்சினி ஜயதீஸ்வரன் மேற்கொண்டுள்ளார்.
இந்நிகழ்வின் ஒலி ஒளிப்பதிவுகள் மட்டக்களப்பு நகர மண்டபம் மற்றும் மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகங்களில் இடம்பெற்றன.
முன்பு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் மேடைகளில் ஆற்றப்பட்ட இந்நிகழ்வை வெளியரங்கில் நடாத்துவதற்கு எண்ணியுள்ளதாக பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.
மாவட்டச் செயலகத்தினால் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி நடாத்தப்படவுள்ள பௌர்ணமி கலை விழாவிலும் இந்நிகழ்ச்சி அரங்கேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment