0

(எஸ்.பி.நாதன்)

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கோடு மட்டக்களப்பு மாநகர சபையினால் ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தில் நூலக நடமாடும் சேவை இன்று வியாழக்கிழமை (17) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாநகர ஆணையாளர் எம். உதயகுமாரின் ஆலோசனைக்கிணங்க பாடசாலையின் அதிபர் எம். யோகானந்தராஜா தலைமையில் சேவை ஆரம்பமானது.

மாணவர்கள் நூல்களை தெரிவு செய்ததோடு நூல்களை இரவல் பெறுவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டதாக ஆணையாளர் தெரிவித்தார்.

பொது மக்களிடையே வாசிப்பு திறனை மேம்படுத்தும் நோக்கோடு நகர, கல்லடி, புதூர், அரசடி மற்றும் மட்டிக்கழி நூலகங்களில் வாசகர் வட்டம், இரவு நேர வாசிகசாலை, இலத்திரனியல் பத்திரிகை வசதிகள் போன்ற பல்வேறு திட்டங்கள் மாநகரசபையால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பிரதி ஆணையாளர் என். தனஞ்செயன்,சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். சந்திரகுமார் மற்றும் நூலகர்கள் பங்கேற்றனர்.

ஓக்டோபர் மாதம் முழுவதும் தேசிய வாசிப்பு மாதமாக அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு   பொது நூலக வளாகம் அதைச் சுற்றியுள்ள சூழல் என்பன சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top