0
ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் நடாத்திய இவ்வாண்டுக்கான கலைவாணி விழா மற்றும் சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வுகள் இன்று, 03-10-2014 வெள்ளிக்கிழமை மாலை பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றன.

பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.சசீந்திரன் குழுவினரின் சிறப்பு பஜனையுடன் ஆரம்பமான கலைவாணி விழா நிகழ்வுகளுக்கு பிரதேச செயலக மஹா கணபதி ஆலயப் பிரதம சிவாச்சாரியாரும் முகாமைத்துவ உதவியாளருமான சிவஸ்ரீ ஆர்.ஜெகதீஸ்வர சர்மா ஆசியுரை வழங்கியதுடன் சிறப்புப் பூஜையையும் நடாத்திவைத்தார்.

இதன்போது குறித்த விழாவைச் சிறப்பிக்கும்வகையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் வடிவமைக்கப்பட்ட இருபத்தியோராவது வாணி விழா சிறப்பு மலரைப் பிரதேச செயலாளர் வெளியிட்டுவைத்தார். அதன் முதல் பிரதியை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கணக்காளர் கே.கேசகன் பெற்றுக்கொண்டதுடன், ஏனைய பிரதிகளை உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. ரி.கிருபைராஜா, கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாச உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து இடம்பெற்ற தமிழர் பாரம்பரியங்களைப் பறைசாற்றும் கலைநிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேசப் பாடசாலை மாணவர்களும், பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பங்குபற்றியதுடன், அவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் பிரதேச செயலாளரின் தலைமையில் இடம்பெற்றது.

இவ்விழாவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பணிபுரியும் மூவினங்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



























Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top