நவராத்திரி விழாவினை முன்னிட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலாளர் திரு.வெ. தவராஜா தலைமையில் “பெண்களுக் கெதிரான வன்முறை ஒழிக” என்ற கருப் பொருளில் பிரதேச செயலகத்தில் இருந்து நகரின் பிரதான வீதிகள் வழியாக காந்தி பூங்கா வரை சென்று அங்கிருந்து மீண்டும் மத்திய வீதி வழியாக அலுவலகம் வரை ஒரு விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றினை நடாத்தினர்.
“பெண்களை மதிப்போம் எம் குலப்பெருமை காப்போம்” “ பெண்களை போற்றுவோம் ‘ “பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா பெண்மை வெல்க வென்று கூத்திடுவோமடா” “ பெண் தெய்வ வழிபாடும் செய்வோம் பெண்கள் வாழ வழி விடுதலும் செய்வோம் “ போன்ற பல வாசகங்களை தாங்கிக் கொண்டு அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வு மட்டக்களப்பு வரலாற்றில் முதல் நிகழ்வாகும்.
மூன்று பெண் தெய்வங்களின் வீரத்தினை போற்றி கொண்டாடப் படும் நவராத்திரி நாட்களில் பெண்விடுதலை தொடர்பாகவும் அவர்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பாகவும் மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நடாத்தியிருக்கும் இவ் விழிப்புணர்வு ஊர்வலம் நவராத்திரி விழாவுக்கு ஒரு புதிய அர்த்தத்தினையும், தேவைபாட்டினையும் வேண்டி நிற்கிறது என பிரதேச மக்கள் பேசிக் கொண்டது இனி வரும் நாட்களில் நவராத்திரி விழா வெறும் பொங்கல், கடலைகளுடன் இல்லாமல் புதிய அர்த்தங்களுடன் அது வடிவம் கொள்ளும்.
Post a Comment