(பொன்முடி) உலக ஆசிரியர் தினம் கோறளைபற்று வடக்கு கல்விக்கோட்டப் பாடசாலையான கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கடந்த புதன்கிழமை (14) பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் பொற்றோர்களின் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றன.
உலக ஆசிரியர் தினமென்றாலே பாடசாலையில் படித்து முடித்து வெளியேறிய மாணவர்கள் தொடக்கம் படித்துக்கொண்டிருக்கின்ற மாணவர்கள் வரை தமக்கு கல்வியை கற்பித்து தந்த ஆசான்களை கௌரவப்படுத்தவேண்டுமே என்ற ஒரு ஆரோக்கியமான மன மகிழ்வொன்று மாணவர்கள் மத்தியில் உருவெடுக்கும் அவ்வாறு தமது ஆசிரியர்களையும் இந்த இனிமையான நாளில் கௌரவப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்துடன் ஒன்றுதிரண்ட பாடசாலை பழைய மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் பாடசாலையின் அதிபர் திரு.நா.சந்திரலிங்கம் உட்பட் ஆசிரியர்களை நிகழ்வின் கதாநாயகர்களாக அழைத்து மலர்மாலை அணிவித்து பாடசாலையின் பிரதான மண்டபத்திற்கு அழைக்கப்பட்டனர்.
நடைபெற்ற நிகழ்வின்போது மங்கள விளக்கேற்றல் நிகழ்வையடுத்து பாடசாலை மாணவர்களினால் வரவேற்பு நடனங்கள் மற்றும் நாடகங்களும் நடைபெற்றன. இதன்போது ஆசிரியர் குழுவினால் இசை கச்சேரி நிகழ்வும் நடைபெற்றதுடன் பழைய மாணவர்களினால் பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் கற்பிக்காப் பணியாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். உலக ஆசிரியர் தின நினைவுச் சின்னங்களை விருதுகளை கல்குடா வலயத்தின் தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் திரு.தரவிச்சந்திரனும், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.த.ரமேஸ் அதிபர்களான திரு.சு.அரசரெத்தினம், திரு.பொ.ராமசந்திரன், திரு.சி.இந்திரன் ஆகியோரும் வழங்கிவைத்தனர்.
நிகழ்வுக்கு வருகைதந்த கல்குடா வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் திரு.தரவிச்சந்திரன், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.த.ரமேஸ் ஆகியோரை கௌரவித்து பாடசாலை பழைய மாணவர்களினால் நினைவுச் சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
Post a Comment