(கிஷோ)
மடக்களப்பு கல்லடி-வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வானது இன்று (16) வியாழக்கிழமை வித்தியாலயத்தின் அதிபர் திருமதி அருட்ஜோதி தலைமையில் வெகுவிமர்சையாக வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழரசுக் கட்சியின் பொது செயலாளரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் இவ் வித்தியாலயத்தின் தோற்றத்திற்கு முதற்படியாக திகழ்ந்த திருமதி லெட்சுமி சாமித்தம்பி கௌரவ அதிதியாகவும், வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த மாகாண சபை உறுப்பினரின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கப்பெற்ற பாண்ட் வாத்திய உபகரணங்கள் மூலம் பாண்ட் வாத்திய இசை முழங்க அதிதிகள் வரவேற்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து பிரதான மண்டபத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வினை மங்கள விளக்கு ஏற்றப்பட்டு ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது வித்தியாலயத்தின் தோற்றத்தின் முதற்படிக் கல்லாய் அமைந்த திருமதி லெட்சுமி சாமித்தம்பிக்கு மலர் மாலைகள் அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தார்கள். இதன் போது ஆசிரியர்களை கௌரவிக்குமுகமாக பிரதம அதிதியினால் நினைவுச்சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்வுகள் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றார் மற்றும் பாடசாலை அபிவிருத்தச் சங்க உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
Post a Comment