0

(எஸ்.பி.நாதன்)

மட்டக்களப்பு பஸ் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை (10) மாலை ஆரம்பிக்கப்பட்ட மூதூர்- திருகோணமலை ஊடாக யாழ்ப்பாணத்திற்கான பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பஸ்நிலைய நேரப்பதிவாளர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (10) மாலை 7.00 மணிக்கு முதன் முதலாக ஆரம்பமான இச்சேவை யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது.

குறித்த போக்குவரத்துப் பாதையினூடான அனுமதிப்பத்திரத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால் இச்சேவையை இடைநிறுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முன் அறிவித்தல் ஏதும் இல்லாததனால் நேற்று சனிக்கிழமை (11) மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமையும் (12)  பயணிக்க வந்த பிரையாணிகள் ஏமாற்றமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top