ஈச்சிலம்பற்று கோட்டத்தில் இடம்பெற்ற இலக்கிய விழாவானது தி/மூ/ ஸ்ரீ சண்பக மகா வித்தியாலய கொத்தணி பாடசாலைகளான தி/மூ திருவள்ளுவர் வித்தியாலயம், ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயம், கறுக்காமுனை வித்தியாலயம், இலங்கைத்துறை அலைமகள் வித்தியாலயம், சிவானந்த கனிஸ்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் சமூகத்தின் ஏற்பாட்டில் கோட்ட பாடசாலைகள் அதிபர், ஆசிரியர்களின் கலை நிகழ்சிகளுடன் கொத்தணி பாடசாலை அதிபர் வி .அருள்நேசராசாவின் வழிகாட்டலின் கீழ் குழுத்தலைவர் கு. கிருஸ்ணானந்தமூர்த்தி தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
இவ்விழாவின் அழைப்பு அதிதிகளாக வெருகல் பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன், ஈச்சிலம்பற்று கோட்டக் கல்வி பணிப்பாளர் செ.லோகராஜா , ஈச்சிலம்பற்று இராணுவ இணைப்பாளர் சு.ஆ.ரு.ஐ பண்டார மற்றும் வெருகல் பிரதேச சபை தவிசாளர் ச. விஜயகாந், ஓய்வு பெற்ற முன்னாள் உதவிக்கல்விப் பணிப்பாளர் ச.அருளானந்தம், தோப்பூர் கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஜனாப் யு.து.யுஜபார், உதவிக்கல்விப் பணிப்பாளர்-தமிழ் ஜனாப் ஹாஜா முகைதீன், சேனையூர் மத்திய கல்லூரி அதிபர் இ.இரத்தினசிங்கம், புவனேஸ்வரி வித்தியாலய அதிபர் திருமதி உமா ரதீஸ்வரன் , பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்கங்களின் தலைவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர்கலென அதிகளவிலானோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

Post a Comment