செப்டம்பர் 28 ஆம் திகதி உலக rabies தினமாகும். உலகில் வருடத்திற்கு 55,000 பேர் இந்நோயினால் இறப்பதாக சுகாதார ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இந்நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக 2007 ஆம் ஆண்டில் இருந்து உலக rabies தினம் அநுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
இக்கொடிய நோய்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் நீர்வெறுப்பு நோய் (rabies) தடுப்பு பிரிவு பல்வேறுபட்ட இடங்களில் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடாத்தி வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக இன்று கொக்குவில் பிரதேசத்தில் மட்டக்களப்பு பெண்கள் லயன்ஸ் கழகத்தினரினால் 'விசர்நாய் கடி நோயை எதிர்ப்போம்' எனும் தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கொன்று பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கருத்தரங்கில் பொது சுகாதார பரிசோதகர் திரு. ப. ரவிச்சந்திரன் மற்றும் சுகாதார கல்வி உத்தியோகத்தர் ஏ.ஏல் . நுகார்டீன் ஆகியோர் கருத்துக்களை வழங்கியிருந்தார்கள். கொக்குவில் பிரதேச பொது சுகாதார பரிசோதகர் ராஜரவிதர்மா இக்கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்ததுடன் மட்டக்களப்பு பெண்கள் லயன்ஸ் கழகம் இந்நிகழ்வுக்கான முழு அனுசரணையையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment