உலகமெங்கிலும் வாழும் இஸ்லாமிய சகோதரர்களின் ஈதுல் - அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துரைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். சி.சந்திரகாந்தன்
விட்டுக்கொடுப்பு தியாகம் என்ற உன்னதமான தத்துவங்களை உலகிற்கு எடுத்தியங்கிய இவ் ஈதுல் - அல்ஹா தியாகத்திருநாள் முஸ்லிம் சகோதரர்களுக்கு மட்டுமன்றி உலகமெங்கும் வாழும் அனைத்து மக்களுக்கும் தேவையான தத்துவங்களையும் கோட்பாடுகளையும் கொண்டுள்ளது.
என ஜனாதியபதியின் அலோகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ச.சந்தரகாந்தன் அவர்கள், ஈதுல் - அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொடர்பில் வடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது…..
விட்டுக்கொடுப்பும் தியாகமும் நிறைந்த ஒரு சமூதாயத்திலோ நாட்டிலோ எவ்விதமான இன்னல்களுக்கும் இடர்களுக்கும் இடமிருக்க மாட்டாது.
எமது நாட்டில் பற்றியெரிந்த இனத்தீயாயினும் அதன் விளைவாக ஏற்பட்ட அழிவுகள் இழப்புகள் ஆயினும் அன்றைய பொறுப்பு மிக்கவர்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட முன்வந்திருந்தால் எமது இத்தீவு பேரழிவுகளையும் இழப்புகளையும் கண்டிருக்காது.
காலம் கடந்தாயினும் இனி உள்ள பொறுப்பு மிக்கவர்களும் அரசியல் தலைமைகளும் இன்னொரு சமுதாயத்திற்கான உரிமைகளையும்இ அரசியல் அதிகாரங்களை வழங்குவதிலும் பரந்த மனதுடன் விட்டுக்கொடுப்புடன் செயற்படுபவர்களாக இருந்தால் எதிர்காலம் எமது நாட்டிற்கு சுபீட்சமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இதே போன்றுதான் தியாகமும் சமூதாயத்தை வழிநடத்தும் அரசியல் தலைமைகள் தான் சார்ந்த சமூதாய நலனுக்காக தியாகங்களைச் செய்வதில் பின்நிற்கக்கூடாது.
ஆனால் துரதிஸ்டவசமாக கடந்த காலங்களில் எமது சமுதாயம் அர்ப்பணிப்புச் சிந்தை தியாக உணர்வுள்ள அரசியல் தலைமைகளைப் பெறாததன் விளைவாகத்தான் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்டு நிர்க்கதியாக்கப்பட்டோம். இனிவரும் காலங்களில் தியாக சிந்தனை அர்ப்பணிப்புள்ள அரசியல் தலைமைகள் எமது மக்களுக்கு கிட்ட வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.
இத்திருநாள் முஸ்லிம் சகோதரர்களுக்கு மட்டுமன்றி இந்நாட்டில் வாழ்கின்ற அனைத்தின மக்களுக்கும் இன ஐக்கியத்தையும் சகோதரத்துவத்தையும் சமமான சகவாழ்வையும் வழிகாட்டும் என்று வாழ்த்துகின்றேன்.
என அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.
Post a Comment