‘கத்தி’ படத்திற்கு இப்போது ‘யு’ சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது. உலகம் முழுவதும் வரும் தீபாவளியன்று அந்தப் படத்தை முழு மூச்சாக அதிக தியேட்டர்களில் வெளியிடவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதுவரையில் தன்னுடைய படங்கள் வெளிநாடுகளில் ரிலீஸான எண்ணிக்கையைவிடவும் ‘கத்தி’ படத்தின் ரிலீஸ் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கவேண்டும் என்பது விஜய்யின் உத்தரவாம்.
தமிழ்நாட்டில் 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் ‘கத்தி’க்காக கிடைத்துள்ளன. இங்கிலாந்தில் 70 தியேட்டர்களும், வட அமெரிக்காவில் 250 தியேட்டர்களையும் குறி வைத்திருக்கிறார்கள். ஆனால் இறுதியில் எவ்வளவு படியுமோ என்பது தெரியவில்லை.
‘கத்தி’ படத்திற்கு தமிழகத்தில் கிடைத்த எதிர்ப்பை மனதில் வைத்து வெளிநாடுகளில் அதிக அளவு ரிலீஸ் செய்து எதிர்ப்பாளர்கள் முகத்தில் கரியைப் பூச வேண்டும் என்று படக் குழுவினர் நினைத்திருக்கிறார்களாம்..
நடக்கட்டும்.. நடக்கட்டும்..!
.jpg)

Post a Comment