0

(எஸ்.பி.நாதன்)

மட்டக்களப்பிற்கு முதல் தடவையாக விஜயம் செய்த பொகவந்தலாவ மலையக காமன் கூத்துக் கலைஞர்கள்; மட்டக்களப்பு அரங்க ஆய்வு கூடத்திற்கு நேற்று ஞாயிறு மாலை (12) விஜயம் செய்தனர்.

பேராசிரியர் எஸ். மௌனகுருவினால் நடாத்தப்படும் ஆய்வு கூடத்திலுள்ள நூலகம், கலைக்கூடம் மற்றும் புராதன இசைக் கருவிகள் என்பவற்றைப் பார்வையிட்டனர்.

மலையக காமன் கூத்துக் கலைஞர்கள்; மட்டக்களப்பு அரங்க ஆய்வு கூடத்தில் இசை நிகழ்வுகளை நடாத்தினர்.

பேராசிரியர் கலைஞர்களுக்கு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள தேடல்கள் பற்றி விழக்கமளித்ததோடு புத்தகங்களை வழங்கி கலைஞாகளுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

நேற்று (12) காலை நாவற்குடாவில் நடைபெற்ற பாரம்பரிய கலைகளின் சங்கமத்தில் மலையக காமன் கூத்துக் கலைஞர்களின் நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.











Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top