லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் அனுசரணையில் திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் மொழித்தின பரிசளிப்பு விழாவும் சாதனையாளர் கௌரவிப்பும் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வானது திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் ந.விஜேந்திரன் தலைமையில் உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.
இவ்விழாவின்போது வலய மட்டத்திலிருந்து தேசிய மட்டம் வரை தமிழ்மொழித்தின போட்டிகளில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களும், தமிழ் மொழிக்கு சேவையாற்றியவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
அத்துடன், தேசிய மட்டங்களில் பரிசுகளைப் பெற்ற மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.
இந்த விழாவின் பிரதம விருந்தினர்களாக ஞானம் அறக்கட்டளையின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் அ.தவனேசன், கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் தமிழ் மொழிப் பிரிவு பணிப்பாளர் கலாநிதி S.சிவனிர்த்தானந்தா, திருகோணமலை கல்வி வலய சிங்கள மொழிப்பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் D.H.மாலினி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன், இந்நிகழ்விற்கு திருகோணமலை கல்வி வலய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெருமளவான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
Post a Comment