0


(எஸ்.பி.நாதன்)


1975 ஆம் அண்டு ஐ.நா சபையில் அங்கவீனர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு ஆண்டாகப் பிரகடனப்படுத்தியது.

இலங்கையில் 1996 ஆம் அண்டு 28 ஆம் இலக்கச் சட்டத்தில் உரிமை, வேலைவாய்ப்பில் 3 வீதம் முன்னுரிமையளிக்கவேன்டும் எனும் ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட்டும் நடைமுறையில் இல்லாமல் உள்ளது வேதனையளிக்கின்றது என தரிசனம் பாடசாலையின் விழிப்புலனற்ற ஆசிரியர் மா. கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டிய நிகழ்வு தேவநாயகம் மண்டபத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொன்டு அவர் மேலும் தெரிவிக்கையில் 2003 ஆம் அண்டு யுத்தத்தால் பலர் பார்வையை இழந்தனர். இலங்கையில் தேசியக் கொள்கை எனும் பெயரில் சட்டம் இயற்றப்பட்டு புனர்வாழ்வு நம்பிக்கைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

1784 ஆம் ஆண்டு பார்வையற்றவர் கல்வி கற்க முடியும் என விசேட கல்வி முறையான பிறெய்ல் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1992 மார்ச் 16 இல் ஆசிரியர் இருதயராஜனாலும் மற்றும் அறிஞர்களாலும் தரிசனம் பாடசாலை ஆரம்பமானது. பாடசாலை மாணவர்கள் கல்லடி சிவானந்தா மற்றும் விவேகானந்தா பாடசாலைகளில் கல்வி கற்கின்றனர்.

தரிசனத்தில் உள்ள மாணவர்கள் பட்டம் பெற்றவர்களில் 4 அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும், 6 பேர் ஆசிரியர்களாகவும் கடமையாற்றுகின்றனர் எனத் தெரிவித்தார்.

இதன்போது தரிசன மாணவர்களின் பேச்சு, பாடல். நடனம் என்பன இடம்பெற்றன. இதன்போது வெள்ளைப்பிரம்பின் பாவனை முறை தொடர்பாக பொது மக்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.



Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top