பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நியமிக்கப்பட்டு பயிற்சிகளில் ஈடுபட்டுவந்த கிராம சேவையாளர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
ஒபொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் இணைந்த சேவைகள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர்களான டபிள்யு.கே.நுவான் சேனாரட்ன பண்டார,மனோஜ் அமரசிங்க மற்றும் மாவட்ட செயலகத்தின் கணக்காளர் நேசராசா,நிர்வாக உத்தியோகத்தர் தயாபாரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள்,உதவி பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நிலவும் கிராம சேவையாளர் வெற்றிடத்தினை தீர்க்கும் வகையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னுர் 65 பேர் கிராம சேவையாளர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
இவர்களுக்கான பயிற்சிகள் பிரதேச செயலங்கள் ஊடாக கிராம மட்டங்களில் வழங்கப்பட்டுவந்தன.
பொதுமக்களின் காலடிகளுக்கு சென்று அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வகையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன.
இதன் கீழ் பயிற்சிகளை பூர்த்திசெய்த 64 கிராம சேவையாளர்களுக்கு நிரந்தர நியமனங்கள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment