சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான கலாசார உடைகள் வழங்கும் நிகழ்வானது ஆலையடிவேம்பு கோட்டத்திற்குட்பட்ட கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்தில் கடந்த (01) திகதி நடைபெற்றது.
செயற்திறன் வாழ்வாதார அபிவிருத்தி நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க காரைதீவு புஸ்பா பொருளாதார கல்வி சமூக அபிவிருத்தி அமைப்பு முன்னெடுத்த இவ்வேலைத்திட்டத்தில் முதற் கட்டமாக வருமானம் குறைந்த 5 மாணவிகளுக்கான கலாசார உடைகள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்தோடு தேசிய மட்ட விளையாட்டுப்போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள அ.பகீரதன் எனும் மாணவனுக்கான சகல செலவினங்களையும் இவ்வமைப்பு பொறுப்பேற்றதுடன் மாணவர்களுக்கான பாதணிகளும் விரைவில் பெற்றுக் கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் கே.தட்சனாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைப்பின் தலைவரும் காரைதீவு முன்னாள் தவிசாளருமான செல்லையா இராசையா கலந்து கொண்டு கலாசார உடைகளை வழங்கி வைத்தார்.
Post a Comment