இந்நிகழ்வானது மாவட்டத்தின் பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள இளைஞர் கழக அங்கத்தவர்களில் பதின்மூன்று தொடக்கம் இருபத்தொன்பது வயதிற்குட்பட்டவர்களுக்கிடையில் இடம்பெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.தவராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகள் மற்றும் இளைஞர் சேவை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பல்வேறுபட்ட போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் , இதில் முதல் மூன்று இடங்களைப்பெறும் வீரர்கள் தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவாகுவதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment