மட்டக்களப்பு வெட்டுக்காடு பிரிவிற்குட்பட்ட பிரதான சந்தையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற ஒரு தொகுதி பெரிய வெங்காயம் பொது சுகாதார பரிசோதகரினால் நேற்றைக்கு முன்தினம் (18) செவ்வாய்க்கிழமை கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தம்புள்ளையிலிருந்து குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி பெரிய வெங்காயம் சுகாதாரத்திற்கு ஊறுவிளைவிப்பதும், கேடானதும், தூய்மையற்றதுமாக காணப்பட்ட காரணங்களினால் வெட்டுக்காட்டு பொது சுகாதாரப் பரிசோதகர் அமுத மாலனினால் சட்டநடவடிக்கைக்காக கைப்பற்றப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
இதன் போது குறித்த நபருக்கு ஆறாயிரம் ரூபாய் தண்ட பணம் விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment