மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளமை நேற்றைய தினம் (23) ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவமானது சம்பவ தினமாகிய நேற்று இரவு 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த திருட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் மாமாங்கம் பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடையவரெனவும், சம்பவம் இடம்பெற்றுள்ள ஆலயத்திலேயே காவலாளியாக கடமையாற்றுபவரெனவும் பொலிசார் தெரிவித்தனர்.
இரவு காவல் கடமையில் ஈடுபட்ட பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றபோதே குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.
Post a Comment