0
(பொன்முடி) உலக வங்கியின் அணுசரனையுடன் 21ம் நூற்றாண்டு உயர் கல்வி எனும் நிகழ்ச்சி
 திட்டத்தின் ஓர் அங்கமான 'இன ஒருமைப்பாடு' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் களணி பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர் மில்டன் தர்மஸ்ரீ தலைமையில் கிழக்குபல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன ஒருமைப்பாட்டு நிகழ்சித்திட்ட இணைப்பாளரும் சிரேஸ்ட மாணவ ஆலோசகருமான திரு.மு.ரவி தலைமையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் கடந்த 14ம் திகதி தொடக்கம் 16 வரையான காலப்பகுதியில் பல்வேறு இன ஒருமைப்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகள் நடைபெற்றன. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மங்களகம மற்றும் புல்லுமலை பிரதேசங்களுக்கும் இக்குழுவினர் விஜயம் செய்திருந்தனர். 

யுத்தத்தின் பின்னரான இன ஒருமைப்பாட்டு செயற்பாடுகளை அவதானித்ததுடன் புல்லுமலை ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் மாணவர்கள் மற்றும் விஜயம் செய்த இரு பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்யும் சிரமதானப்பணியிலும் ஈடுபட்டதுடன் ஞானபகார்த்த தென்னை மர கன்றுகளையும் நட்டனர். 

அதனைத் தொடர்ந்து அனைவரினதும் பங்கேற்றலுடன் சமதானத்தை வெளிப்படுத்தும் சில வெளிக்கள செயற்பாடுகள் நிகழ்த்தப்பட்டதுடன் அதே தினம் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து இரு பல்கலைகழக மாணவர்களும் இணைந்து கலாராத்தை பிரதிபலிக்கும் நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன. 

இவ்வாறான வருகை இனங்களுக்கிடையில் பரஸ்பர நல்லிணக்கத்தையும் இணைந்த ஆராச்சி செயற்பாடுகளையும் ஊக்குவிற்கும் என்பது இந் நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய நோக்கமாகுமென ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு பல்கலைக்கழக இன ஒருமைப்பாட்டு நிகழ்சித் திட்ட இணைப்பாளரும் சிரேஸ்ட மாணவ ஆலோசகருமான திரு.மு.ரவி அவர்கள் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வுக்கு கலைகலாசாரபீட பீடாதிபதி கலாநிதி க.ராஜேந்திரன்இ களனிபல் கலைக்கழக புவியல்துறைத் தலைவர் கலாநிதி ஏ.ஜீ. அமரசிங்க மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.











Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top