0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் மாகாண சபை வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் சுயதொழில் ஊக்குவிப்புக்கான வாழ்வாதார நிதியுதவி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.தவராசா தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் கலந்து கொண்டதுடன், மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகஸ்தர் எஸ்.ஜெயசேரன், கணக்காய்வாளர், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.

நிதியுதவி கோரப்பட்டவர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு நிதியுதவிகளும் மற்றும் தையல் இயந்திர உதவிகளும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது







Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top