0
இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்புடனும் மாவட்டத்தின் சகல பிரதேச செயலகப்பிரிவுளிலும் விசேட பூஜைகளும் வழிபாடுகளும் மரநடுகையும் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுகளில் மாவட்டத்திலுள்ள அரசியல் பிரமுகரகள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி> இந்து சமய வழிபாடுகளில் பிரதி அமைச்சர் வி.முரளிதரன்> முன்னாள் முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன்> முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்> சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களான அருண் தம்பிமுத்து இராஜபுத்திரன் சாணக்கியன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

பிரதேச செயலக ரீதியாக> மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம்> கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம்>  கன்னன்குடா கண்ணகை அம்மன் ஆலயம்> ஆரையம்பதி சிவனேஸ்வரர் ஆலயம்> களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயம்> கிரான் சித்தி வினாயகர் ஆலயம்> களுமுந்தன் வெளி மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்> மாவடிவேம்பு காணி அம்மன் ஆலயம்> வாழைச்சேனை கைலாயப்பிள்ளையார் ஆலயம்> வாகரை சௌபாக்கிய பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றில் வழிபாடுகள் நடைபெறவுள்ளது. 

அதே நேரம்> மட்டக்களப்பு மாவட்ட சுதந்திர இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இரத்ததானமுகாம் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதிக்கிளை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. 

இதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு விசேட பிரார்த்தனை நிகழ்வுகளும்> மர நடுகைகளு;ம்> ரத்ததான முகாம்களும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top