அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேசசபையின் ஆளும் தமிழ் சேசிய கூட்டமைப்பு உறுப்பினரொருவர் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்கு கட்சி தாவியுள்ளார்.
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2015ம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் அண்மையில் சமர்ப்பிக்கப்படவிருந்த நேரத்தில் ஆளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் தியாகராஜா எதிர் கட்சியான ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்கு கட்சிதாவி தனது ஆதரவினை தொடர்து ஜனாதிபதியின் தலைமையிலான கட்சிக்கு வழங்கவுள்ளதாக பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவர் ரகுபதி தெரிவித்தார்
மேலும் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சார்வில் ஐவரும், ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்வில் இருவரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் சார்வில் ஒருவரும் மேலும் சுயேட்சை குழு சார்வில் ஒருவருமாக மொத்தம் 09 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். இத்தறுவாயில் ஆளும்தரப்பு உருப்பினர் ஒருவரின் மாற்றம் சபையில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடுமேன எதிர்பார்க்கப்படுகின்றது
Post a Comment