வாகரையினை பிறப்பிடமாகவும் அமிர்தகழியை வசிப்பிடமாகவும் கொண்ட அருமைநாயகம் நேசதுரை அகில இலங்கை சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.
என்.எம்.எம்.அப்துல்லா முன்னிலையில் அண்மையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். சமூக சேவையாளரும் , கூத்துக் கலைஞருமான இவர் கிராம உத்தியோகத்தராக 36 வருடங்களாக சேவையாற்றிக் கொண்டிருக்கின்றார் என்பதுடன் , 1994 ஆம் ஆண்டு தொடக்கம் மட்டக்களப்பு நிர்வாக எல்லைக்குள் சமாதான நீதவானாக சேவையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment