மாணவர்களை நாளைய உலகிற்கு சிறந்த பிரஜையாக உருவாக்குவதற்கு முதற்படியாக அமைவதே ஆரம்ப நிலை கற்றல் செயற்பாடு ஆகும். அந்த வகையில் லிட்டில் வட்ஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 28.11.2014 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி கலை அரங்கத்தில் பாடசாலையின் பணிப்பாளர் எஸ்.முகுந்தன் தலைமையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்சன் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு பிராந்திய கல்வி மற்றும் பொருளாதார நிறுவனத்தின் பணிப்பாளரும் நனசல செயற்திட்டத்தின் வடக்கு கிழக்கு பிராந்திய இணைப்பாளருமாகிய ரீ.மயூரன், லிட்டில் வட்ஸ் பாடசாலையின் தலைவர் கே.சிவசண்முகராஜா, நிலஅளவைத் திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளரும் லிட்டில் வட்ஸ் பாடசாலையின் ஆலோசகருமான வீ.சிவரஞ்ஜன் மற்றும் லிட்டில் வட்ஸ் பாடசாலையின் செயலாளரும் மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியின் ஆசிரியையுமான கே.சிந்துஜா எனபலரும் கலந்துகொண்டனர். அத்துடன் குளோபல் இன்ரநெசனல் பாலர் பாடசாலையின் இயக்குனர் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
இதன் போதுமாணவர்களின் பலகலைநிகழ்வுகள் இடம் பெற்றதுடன் இவ்வருடம் பாடசாலையை நிறைவுசெய்த மாணவர்களின் சான்றிதழ் வழங்கும் வைபவமும் அத்துடன்பாடசாலைஆசிரியர்கள் பெற்றோர்களினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும்,விருந்தினர்களை கௌரவிக்கும் முகமாக நினைவுச் சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment