0
(சச்சு)

கல்வியமைச்சின்  செயற்பாடுகளில் ஒன்றான (மதர்ஸ்ரீலங்கா) இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தில் தமிழ், முஸ்லிம் பாடசாலைகளுக்கிடையிலான சந்திப்பும் தீபாவளி கொண்டாட்ட நிகழ்வும் இன்று கல்லடி உப்போடை விவேகானந்தா மகளீர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வானது கல்லடி உப்போடை விவேகானந்தா மகளீர் மகா வித்தியாலயத்திற்கும், காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலயத்திற்குமிடையில் இடம்பெற்றது.

பேண்ட் வாத்தியக்குழுவினரின் இசை முழங்க மாணவிகளும் இரு பாடசாலைகளின் அதிபர் , ஆசிரியர்கள் அழைத்துவரப்பட்டனர்.

இவ்வாறாக அழைத்துவரப்பட்டவர்களுக்கு உயர்தர மாணவர்கள் மலர் செண்டுகொடுத்து தமிழ் கலாசார முறைப்படி வரவேற்றனர்.

அதனைத்தொடர்ந்து இரு பாடசாலை மாணவர்களினதும்  கலாசாரங்களை பிரதிபலிக்குமுகமான கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இரண்டு பாடசாலைகளுக்குமிடையிலான புரிந்துணர்வை கட்டியெழுப்பும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட இந்தநிகழ்வானது இதுவே முதல் தடவையாக இடம்பெற்றுள்ளது. 

அதன்போது  விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் மாணவர்களின் வகுப்பறை, மற்றும் ஏனைய பகுதிகளையும் மீராபாலிகா மகாவித்தியாலய மாணவர்கள் பார்வையிட்டு சென்றமையும் குறிப்பிடத்தக்கது.


















Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top