கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “நிலைபேறான விவசாய செய்கையினை ஊக்குவித்தல்” எனும் தொனிப்பொருளுக்கமைவாக விவசாயிகளுக்கு விளக்கமளிக்கும் பிரசார நிகழ்வானது கோமாரி– 02ஆம் கிராமத்தில் விவசாயப் போதனாசிரியர் எஸ். சித்திரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
கோமாரி விவசாய திணைக்கள அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் இயற்கை பீடை நாசினி தயாரிப்பும் பாவனையும் அதன் மூலம் நஞ்சற்ற விவசாய உற்பத்திகளை பெறுவது சம்மந்தமாகவும் செய்முறை பயிற்சியுடன் சிறப்பான முறையில் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி விவசாயப் பணிப்பாளர் டி.எம்.எஸ்.பி திசாநாயக்க, வலய விவசாய உத்தியோகத்தர் எம்.ஐ. இஸ்மாலெவ்வை, பாடவிதான உத்தியோகத்தர் என்.எம்.ஆர். றசூல், லகுகல விவசாய வலய விவசாயப் போதனாசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் கே. கயாந்தராஜா, திவி நெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.ஜெயந்திமலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பி. மதிவதனி, வெஸ்ட் சீட்ஸ் நிறுவன விரிவாக்கல் உத்தியோகத்தர் வி.கலாசிறி மற்றும் பிரதேச விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த விவசாயப் போதனாசிரியர்,
Post a Comment