0
(எரிக்)

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் ஏற்பாட்டில் அண்மையில் இரத்ததான நிகழ்வொன்று தேவாலய போதகர் றொசான் மகேசன் தலைமையில் நடைபெற்றது. 

குறித்த  இரத்ததான நிகழ்வை மட்ட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியைச் சேர்ந்த டாக்டர் க. விவேக் தலைமையிலான தாதியர் குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது  42 பேர் இரத்த கொடையாளர்களாக கலந்துகொண்டு இரத்தம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ் இரத்ததான முகாமானது ஆலயத்தில் ஐந்தாவது வருடமாக தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.













Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top