கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாவதும் இறுதியுமான வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (24) திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.
கடந்த 25ஆம் திகதி முதல் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் இடம்பெற்று வந்ததுடன் நவம்பர் மாதம் முதலாம் திகதி இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது நூறு மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டிருந்தது.
குழுநிலை விவாதத்தின் இறுதி நாளான இன்று நிதி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அரசாங்கத்துடன் இருந்த சில உறுப்பினர்கள் தற்போது எதிரணியில் இணைந்துள்ளனர்.
அத்தோடு ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக
செயற்பட முடிவெடுத்துள்ளதால் வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குழுநிலை விவாதம் நிறைவுபெற்றதும் இன்று மாலை ஐந்து மணியளவில் இவ் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment