(பொன்முடி)
மட்டக்களப்பு மாவட்ட கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட புல் வேளாண்மை ஊக்குவிப்பு தொடர்பான நிகழ்வு கடந்த 17 திகதி திங்கள்கிழமை முறக்கொட்டான்சேனை தேவபுரம் LOH மண்டபத்தில் நடைபெற்றது.

LOH இனால் உருவாக்கப்பட்ட நட்சத்திரா மளகளிர் அமைப்பினர் மாடு வளர்ப்பு திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர் இதனை ஊக்குவிக்கும் வகையில் அமைப்பிற்கு புல் வளர்ப்பு திட்டத்தினை அறிமுகப்படுத்தி மேலதிக புல்களை எவ்வாறு சேமிப்பது பற்றியும். அதனூடாக பல பண்ணையாளர்கள் நன்மையடைய வேண்டும் என்றும் கேட்கப்பட்டது.
சுமார் 150 பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதிதிகளால் புல் நாட்டி வைக்கப்பட்டது இதில் மாவட்ட ரீதியில் 1 ம் 2ம் 3 ம் இடங்களை பெற்ற பண்ணையாளர்களுக்கு சான்றிதழ்களும் காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திருகோணமலை Ap & H மாகாண பணிப்பாளர் கலாநிதி.ரி.கே. தவராஜா, சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு Ap & H மாவட்ட பணிப்பாளர் கலாநிதி .உ. குகேந்திரன், கௌரவ விருந்தினர்களாக Milco கிழக்கு பிராந்திய முகாமையாளர் கே. கனகராஜா, மட்டக்களப்பு பொதுமுகாமையாளர் Ladder of Hope திருமதி சகுந்தலா ரஞ்சினி மதிதரன் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
Post a Comment