0

(அன்பழகன் குரூஸ்)   


உலக கத்தோலிக்கரின் இறை தந்தையான புனித பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ்  திருத்தந்தை  2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கான திருப்பயணத்தினை மேற்கொள்வார் என வத்திக்கான் தகவல் ஊடகப் பணியகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி 2015 ஜனவரி மாதம் 13ம் திகதி காலை 09.00 மணிக்கு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் திருத்தந்தைக்கு வரவேற்பளிக்கப்பட்டு, அங்கிருந்து நீர்கொழும்புவரை சென்று நீர்கொழும்பிலிருந்து கொழும்புவரை நீர்கொழும்பு வீதி வழியாக ஊர்வலமாக அழைத்து வரப்படவுள்ளார்.

அன்று பகல் 01.15 மணிக்கு கொழும்பு ஆயர் இல்லத்தில் திருத்தந்தை இலங்கைப் பேராயரைச் சந்திக்கவுள்ளார். மாலை 05.00 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் அதிமேதகு ஜனாதிபதியுடனான விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளது. மாலை 06.15 மணிக்கு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சர்வமதத் தலைவர்களுடன் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

2015 ஜனவரி 14ம் திகதி காலை 08.30 மணிக்கு கொழும்பு காலிமுகத்திடலில் விசேட திவ்விய நற்கருணை ஆராதனை இடம்பெறுவதுடன், புனித ஜோசப் வாஸ் அடிகளாரைப் புனிதராகத் திருநிலைப்படுத்தவுள்ளார். இவ் ஆராதனையில் அனைவரும் பங்குகொண்டு திருத்தந்தையின் ஆசியைப் பெற்றுகொள்ள முடியும்.

மாலை 03.30 மணிக்கு மன்னார்  மடுமாதா தேவாலயத்தியில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. இத் திருப்பலியிலும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு திருத்தந்தையின் ஆசியைப் பெற்றுகொள்ள முடியும்.

15ம் திகதி காலை 08.15 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பிரியாவிடை வைபவத்துடன் இலங்கையிலிருந்து பிலிப்பைன்ஸ் மணிலா நோக்கிப் புறப்படுவார்.

திருத்தந்தையின் வருமையை முன்னிட்டு இலங்கை கத்தோலிக்க திருச்சபை ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. திருத்தந்தையின் ஆசிபெற ஆர்வமுள்ளவர்கள் ஆராதனைகளில் கலந்துகொள்ளவும் ஆயத்தமாகிவருகின்றனர்.  


Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top