அந்தவகையில் மட்டக்களப்பு ஆனைப்பந்தி பெண்கள் பாடசாலையிலும் ஒளிவிழா நிகழ்வுகள் பாடசாலை அதிபர் எஸ்.உதயகுமார் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் கோட்டைக்கல்வி அதிகாரி டேவிட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், கல்விசார் அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது பாடசாலை அதிபர், ஆசிரியர், மாணவர்களால் கரோல் கீதம் இசைக்கப்பட்டு, பாலகன் பிறப்பினை சித்தரிக்கும் காட்சியும், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன். அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment