0
(சிமஸ்னு)


மண்முனைப்பற்று பிரதேசசபை எல்லைக்குட்பட்ட 27 கிராம சேவகர் பிரிவுகளிலும் திண்மக் கழிவகற்றல் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆலயங்களின் நிருவாக சபையினர்களுடனான கலந்துரையாடல் நேற்றைய தினம் (26) மண்முனைப்பற்று பிரதேசசபையின் மாநாட்டு மண்டபத்தில் பிரதேச சபையின் செயலாளர் திருமதி கா.ஜே. அருள்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.

பிரதேசசபை மற்றும் யுனொப்ஸ் நிறுவனம் இணைந்து மேற்கொள்ளும் இத் திட்டத்தின் முதல் கட்டமாக திண்மக்கழிவு சேகரிப்பிற்காக உழவு இயந்திரப் பெட்டி ஒன்றும் யுனொப்ஸ் நிறுவனத்தினால் வழங்கப்பட்டு பாலமுனை இசெல்வாநகர் பகுதிகளில் பொது மக்கள் மற்றும் சமூக அபிவிருத்திக் குழுக்களுக்கு விழிப்புணர்வு ஒன்றுகூடல்கல் நடாத்தப்பட்டு கழிவுகள் தரம்பிரித்து சேகரிக்கப்படுவதுடன் பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் கழிவூகளை தரம்பிரித்து சேகரிப்பதற்காக கழிவு சேகரிப்பு கொள்கலன்களை அதிபர்கள், ஆசிரியர்கள், ஆலயங்களின் நிருவாக சபையினர் ஆகியோரிடம்  வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top